வந்த முதல் வாரமே நாமினேட் ஆன WildCard போட்டியாளர்கள் – பேசி வைத்து நாமினேட் செய்த பூர்ணிமா மற்றும் மாயா.

0
423
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஐந்தாம் வாரத்திற்கான நாமினேட் பட்டியல் தற்போது வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது வாரம் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் மக்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். வழக்கம் போல் நிகழ்ச்சியில் முதல் நாளே போட்டியாளர்கள் மத்தியில் சண்டை, கலவரம் தொடங்கி விட்டது. மேலும், முதல் வாரம் எவிக்சன் நடக்காது என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேறி இருந்தார். பின் பவா, தன்னால் இனி நிகழ்ச்சியில் விளையாட முடியாது என்று தாமாகவே வெளியேறிவிட்டார்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7:

அதற்கு பிறகு மூன்றாம் வாரம் நடந்த எவிக்ஷனில் மாயா அல்லது பூர்ணிமா ஆகிய இருவரில் யாராவது வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய் வர்மா வாரம் வெளியேறி இருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சி தான். பின் நான்காம் வாரம் பூர்ணிமா ரவி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். கடந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடந்தது. அதன்படி கூல் சுரேஷ், வினுஷா, மாயா, சரவண விக்ரம், விஷ்ணு, பிரதீப் ஆண்டனி, யுகேந்திரன், அக்ஷயா, நிக்ஸன், ஜோவிகா, மணி ஆகியோர் நாமினேட் ஆகிருந்தார்கள்.

பின் கடந்த வாரம் டபுள் எவிக்சன் நடைபெற்றது. அதில் வினுஷா மற்றும் யுகேந்திரன் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். மேலும், அனைவரும் எதிர்பார்த்த wild card போட்டியாளர்கள் நேற்றய நிகழ்ச்சியில் ஒவ்வொருவராக என்ட்ரி கொடுத்து இருந்தார்கள். அதன் படி கானா பாலா, அர்ச்சனா, பிராவோ, தினேஷ் மற்றும் அன்னபாரதி ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த வாரமும் பூர்ணிமாவே கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதோடு Wild card போட்டியாளராக நுழைந்த போட்டியாளர்களையே பிக் பாஸ் வீட்டார், ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்து இருக்கின்றனர். இவர்களுடன் விசித்திராவும் சென்று இருக்கிறார். மேலும், இவர்களின் என்ட்ரி தங்களுக்கு விருப்பமில்லை என்று பிக் பாஸ் வீட்டில் உள்ள சிலர் கூறி இருந்தனர். அதிலும் குறிப்பாக பூர்ணிமா, ஜோவிகா,மாயா ஆகிய மூவரும் புதிதாக வந்துவிட்டு எங்களை பற்றி எப்படி பேசலாம்.

கண்டிப்பாக இவர்களை தான் நாங்கள் நாமினேட் செய்யப்போகிறோம் என்று ஓப்பனாக கூறினார்கள். இப்படியொரு நிலையில் இந்த வாரம் நாமினேட் ஆகிருப்பவர்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதில், கானா பாலா, அர்ச்சனா, பிராவோ, தினேஷ், அன்னபாரதி, அக்ஷ்யா, மணி,ஐஷு, மாயா ஆகியோர் நாமினேட் ஆகி இருக்கிறார்கள்.

Advertisement