முதல் வாரமே பரபரப்பு, பிக் பாஸ் 7 சக்ஸஸ்ஸா, பிளாப்பா ? முதல் வார Trp ரேட்டிங் விவரம் இதோ.

0
1900
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் டிவிஆர் ரேட்டிங் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பொதுவாகவே சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அனைவரும் விஜய் டிவி நிகழ்ச்சி தான் சொல்வார்கள். மேலும், டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருப்பது விஜய் டிவி நிகழ்ச்சி தான். வயது வரம்பு இல்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் இந்த நிகழ்ச்சிகளை பார்த்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

சீரியல்களை விட விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி மவுஸ் இருக்கிறது. அந்த வகையில் விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சி இவ்வளவு பிரபலமாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் கமலஹாசன் என்று சொல்லலாம். இவர் தான் நிகழ்ச்சியை பல வருடங்களாக தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்களை முடிவடைந்திருக்கிறது.

- Advertisement -

கடந்த வாரம் தான் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா விஜயகுமார், அனன்யா ராவ், ஐஷு, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். மேலும், இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. இந்த முறை சின்ன பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தான் சமையல், கிளீனிங் எல்லாம் செய்யணும் என்று அறிவித்திருந்தார்கள். இந்த சின்ன பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் நபரை கேப்டன் தான் தேர்ந்து எடுப்பார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி:

சொல்லப்போனால், இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை கொண்டு சென்றிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணியிலிருந்து 10.30 மணி வரை ஒளிபரப்பாகி வருகிறது. சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களிலும் 9.30 முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகிறது. இந்த இரண்டு நாட்களிலும் கமல் வருவார். இப்படி நாளுக்கு நாள் பரபரப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி டி வி ஆர் ரேட்டிங்:

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங் வெளியாகி இருக்கிறது. அதாவது, இதுவரை கிடைத்திருக்கும் தகவலின்படி பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்ட(லான்ச்) எபிசோட் டி வி ஆர் ரேட்டிங் 9.9 புள்ளிகள் பெற்று இருக்கிறது. லான்ச் எபிசோடின் ரேட்டிங்கே இப்படி என்றால் முதல் வார ரேட்டிங் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. இந்த முறை பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பையும் ஆர்ப்பாட்டத்தையும் ஏற்பட்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த ரேட்டிங் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒட்டுமொத்த வெற்றி என்றெல்லாம் கூறப்படுகிறது.

Advertisement