நாளை துவங்க இருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி – போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா ?

0
960
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் எக்ஸ்க்ளூசிவ் பட்டியல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி தான் பிக் பாஸ். ல் தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி அறிமுகமானது. முதல் சீசனை தொடர்ந்து தற்போது ஆறு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஆறு சீசன்களையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-
BiggBoss

மேலும், இந்த பிக் பாஸ் வீட்டுக்குள் புதுப்புது வித்தியாசமான டாஸ்க்களை கொடுத்து மக்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டிருக்கிறது. அக்டோபர் 1 முதல் இந்த நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த முறை நிகழ்ச்சியில் யார்? கலந்து கொள்ள போகிறார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் மத்தியில் அதிக ஆவல் ஏற்பட்டிருக்கிறது.

- Advertisement -

பாஸ் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி

அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலக்கப்போவது யாரு காமெடி நடிகர் சரத், பாவனா, மாகாபா, உமாரியாஸ் ஆகியோர் ஆடிஷனில் கலந்து இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் விஜய் டிவி சார்பாக யார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பார்கள் என்று தெரியவில்லை. இந்த நிகழ்ச்சியில் சோசியல் மீடியாவில் பிரபலமாக இருப்பவர்கள், படங்களில் நடித்து வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் பிரபலங்கள், வெளிநாட்டு மக்கள் என பல பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் தான் இந்நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி இருந்தது. அதில் இந்த முறை வித்தியாசமாக இரண்டு வீடு என்று கமல் கூறியிருக்கிறார். இதனால் எப்படி இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப் போகும் என்று ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சில போட்டியாளர்களின் பட்டியல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

கூல் சுரேஷ்:

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக அறிமுகமாகி தற்போது முன்னணி ஹீரோக்களின் படங்களின் ப்ரோமோஷன் செய்து கொண்டிருக்கிறார். வெந்து தணிந்தது காடு எஸ்டிஆர்க்கு வணக்கத்தை போடு என்ற வசனத்தின் மூலம் தமிழ் மக்களில் பிரபலமானார். அது மட்டும் இல்லாமல் இவர் ஏதாவது ஒன்று செய்து சர்ச்சையில் சிக்கிக் கொண்டுதான் இருக்கிறார். இவர் வந்தால் நிகழ்ச்சி கண்டிப்பாக களைகட்டும்.

அனன்யா ராவ்:

இவர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் டைட்டில் வென்ற பாலாஜி முருகதாசின் ஃபேமிலி ஃப்ரண்ட் என்கிறார்கள். பாலாஜி முருகதாஸ் பிக் பாசிஸ் வந்த சீசன் போதே கலந்து கொள்ள ஆசைப்பட்டவருக்கு இப்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஐஷு:

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த அமீரை எடுத்து வளர்த்த குடும்பத்தினரின் மகள் தான் ஐஷு. அமீர் கலந்து கொண்ட போது நிகழ்ச்சியில் இவரும் வந்திருந்தார். தற்போது இவர் போட்டியாளராக வர இருப்பதாக கூறப்படுகிறது.

விஷ்ணு:

சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விஷ்ணு. இவர் விஜய். ஜீ தமிழ். கலர்ஸ் தமிழ் என பல சேனல்களில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்.

சரவணன்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கடைக்குட்டி தம்பி கண்ணன். தற்போது இவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவடைவதால் தான் இவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. அதே போல் இவருக்கு ஜோடியாக நடிக்கும் தீபிகாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

பவா செல்லதுரை:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக எழுத்தாளர் ஒருவர் செல்ல இருக்கிறார். ஆனந்த விகடன் இதழில் சமீபத்தில் வெளியான சொல்வழிப் பயணம் என்ற தொடரை எழுத்தாளர் பவா எழுதினார்.

அக்ஷயா உதயகுமார்:

கடந்த ஆண்டு வந்து சூப்பர் ஹிட் கொடுத்த லவ் டுடே படத்தில் கதாநாயகி இவானாவின் தங்கையாக இவர் நடித்திருந்தார். இவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கலந்து கொள்கிறார். இவரை தவிர சில போட்டியாளர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் குறித்த விபரம் இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Advertisement