TTF டாஸ்கில் பங்கேற்க முடியாத அர்ச்சனா Best Performer – தனது பாயிண்டை யாருக்கு கொடுத்துள்ளார் பாருங்க.

0
173
- Advertisement -

தமிழில் அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 10  வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியில் பல மாற்றங்கள் செய்து இருக்கிறார்கள். குறிப்பாக, இந்த முறை இரண்டு வீடுகள் இருக்கிறது. மேலும், கடந்த சில வாரமாகவே பிக் பாஸ் வீடு அனல் பறந்து கொண்டு இருக்கிறது. இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் விஷ்ணு, கூல் சுரேஷ், தினேஷ், நிக்சன், அனன்யா, அர்ச்சனா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த வாரம் 2 அல்லது மூன்று பேர் எலிமினேட் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

டான்ஸ் மாரத்தான் டாஸ்க்:

பின் இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் பிக் பாஸ், இரண்டு நபரை தேர்ந்தெடுத்து அவர்கள் போட்டியில் கலந்து கொள்ள கூடாது என்று சொன்னவுடன் எல்லாருமே அர்ச்சனா, விஜய் வர்மாவை தேர்ந்தெடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத அளவிற்கு செய்துவிட்டார்கள். இதனால் வீட்டிலேயே கலவரம் இடித்தது. பின் நேற்று நிகழ்ச்சியில் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது.

போட்டியாளர்கள் கெட்டப்:

இதில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒவ்வொரு கெட்டப் பிக் பாஸ் கொடுத்து இருக்கிறார்.
தினேஷ்- படையப்பா ரஜினி
விசித்ரா- நீலாம்பரி
அர்ச்சனா- திமிரு பட வில்லி
பூர்ணிமா- பருத்திவீரன் முத்தழகு
விஷ்ணு- போக்கிரி விஜய்
மாயா- ஜீன்ஸ் வைஷ்ணவி

-விளம்பரம்-

பின்னி பெடலெடுத்து போட்டியாளர்கள்.

இப்படி ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய கதாபாத்திரமாகவே மாறி நடனமாடி இருந்தார்கள். குறிப்பாக விசித்ரா, தினேஷ், அர்ச்சனா ஆகியோர் தங்களுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார்கள். அதே போல நேற்றய நிகழ்ச்சியில் கரன்சியை மாறி மாறி பரிமாறிக் கொண்டு பாயிண்ட்ஸ்களை தங்கள் இஷ்டத்திற்கு போட்டியாளர்கள் போட்டுக்கொண்டதால் கடுப்பானார் பிக் பாஸ்.

அர்ச்சனா கொடுத்த ஷாக் :

இதனால் போட்டியாளர்கள் மீது கடும் அதிருப்தி கொண்டு அவர்களை கடுமையாக எச்சரிக்கவும் செய்தார். இப்படி ஒரு நிலையில் இன்றும் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் தொடர்ந்து சென்று கொண்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் டான்ஸ் மாரத்தான் டாஸ்கில் சிறந்த போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் அர்ச்சனா. ஆனால், அவர் TTF டாஸ்கில் இல்லை என்பதால் அவருடைய இந்த ஒரு பாயிண்டை பூர்ணிமாவிற்கு கொடுப்பதாக ஷாக் கொடுத்துள்ளார்.

Advertisement