அர்ச்சனா, விசித்ராவிடம் தனது அம்மா நடந்துகொண்ட விதத்தை பார்த்து ஷாக்கான பூர்ணிமா.

0
274
- Advertisement -

தமிழில் அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 78 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

மேலும், கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் விஷ்ணு, கூல் சுரேஷ், தினேஷ், நிக்சன், அனன்யா, அர்ச்சனா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருந்தனர். பின் அனைவரும் எதிர்பார்த்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் பிக் பாஸ், இரண்டு நபரை தேர்ந்தெடுத்து அவர்கள் போட்டியில் கலந்து கொள்ள கூடாது என்று சொன்னவுடன் எல்லாருமே அர்ச்சனா, விஜய் வர்மாவை தேர்ந்தெடுத்து இருந்தனர். பின் நிகழ்ச்சியில் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

பிக் பாஸ் 7:

இதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய கதாபாத்திரமாகவே மாறி நடனமாடி இருந்தனர். குறிப்பாக விசித்ரா, தினேஷ், அர்ச்சனா ஆகியோர் தங்களுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார்கள். இதற்கிடையில் யாரும் எதிர்ப்பாக்காத வகையில் முதல் மிட் வீக் எவிக்ஷன் நடைபெற்றுஇருந்தது. அதில் அனன்யா வெளியேறி இருந்தார். இதனால் மீதம் தினேஷ், கூல் சுரேஷ், அர்ச்சனா, விஷ்ணு, நிக்சன் ஆகியோர் இந்த வார நாமினேஷனில் தொடர்ந்தனர். இதில் நிக்சன் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்ட்டது.

கூல் சுரேஷ் வெளியேற்றம்:

கடந்த சில வாரங்களாகவே கூல் சுரேஷ் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறிக்கொண்டே இருந்தார். இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட கூல் சுரேஷ் சுவர் ஏறி குதித்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி இருந்ததது. கூல் சுரேஷ் இப்படி செய்ததால் இந்த வாரம் பிக் பாஸ் எவிக்ஷனில் குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாகவே அவரை சேனலே வெளியில் அனுப்பி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பொதுவாக சனிக்கிழமை எலிமினேஷன் நடந்தாலே அது டபுள் ஏவிக்ஷனின் அறிகுறி தான்.

-விளம்பரம்-

இந்த வார நாமினேஷன் :;

எனவே இந்த வாரமும் டபுள் ஏவிக்ஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் நிக்சன் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஞாயிற்று கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் யாரும் வெளியேறவில்லை. இப்படி ஒரு நிலையில் நேற்று வாரத்தின் முதல் நாள் என்பதால் நாமினேஷன் நடைபெற்று இருக்கிறது. அதில் பெரும்பாலான பேர் ரவீனாவின் பெயரை கூறி இருக்கின்றனர். அதனால் அவர் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது.

லேட்டஸ்ட் ப்ரோமோ :

இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் போட்டியாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த Family Round துவங்கி இருக்கிறது. அந்த வகையில் பிக் பாஸ் வீட்டின் உள் சென்றுள்ள பூர்ணிமாவின் அம்மா, விசித்ராவிடம் தனது பெண் ஏதாவது தப்பு செய்து இருந்தால் மன்னித்துவிடுங்கள் என்று கூறியுள்ளார். மேலும், அர்ச்சனாவிடமும் பேசிய விதத்தை பார்த்து ஷாக் ஆகி இருக்கிறார் பூர்ணிமா

Advertisement