முடிந்தது இரண்டாம் TTF டாஸ்க் – டாப் 3 இடத்தில் இருக்கும் மூன்று பேர் யார் யார் தெரியுமா?

0
246
- Advertisement -

தமிழில் விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 85 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி செல்வதால் அனல் பறந்து கொண்டு இருக்கிறது. மேலும், கடந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் போட்டியாளர்கள் இரண்டு நபரை தேர்வு செய்து TTF போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

- Advertisement -

அந்த வகையில் அனைவருமே சேர்ந்து அர்ச்சனா, விஜய் வர்மாவை தேர்ந்தெடுத்து இருந்தார்கள். இதனால் இருவருமே பயங்கர பயங்கர கடுப்பில் இருந்தார்கள். அதற்குப் பின் நிகழ்ச்சியில் பல டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் நேற்று கொடுக்கப்பட்ட முயல் டாஸ்க் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒரு முயல் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

முயல் டாஸ்க்:

அந்த முயலுக்கான வீட்டை கட்ட செங்கலும் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் எந்த போட்டியாளர் வீட்டையும் தன்னுடைய முயலையும் பார்த்துக் கொள்கிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார். இதனால் ஒவ்வொரு போட்டியாளர்களும் விறுவிறுப்பாக விளையாட ஆரம்பித்தார்கள். வழக்கம் போல் மாயா- பூர்ணிமா இருவருமே சேர்ந்து மற்ற போட்டியாளர்களை தீர்த்து கட்ட முடிவு பண்ணார்கள்.

-விளம்பரம்-

டாஸ்கில் வென்றவர்:

ஆனால், மணி- விஷ்ணு இருவரும் சேர்ந்து பூர்ணிமாவை காலி செய்து விட்டார்கள். அதிலும் டாஸ்கின் போது விஷ்ணு பூர்ணிமாவுடைய செங்கலை காலால் எட்டி உதைத்து தட்டி இருக்கிறார். இறுதியில் மணி- விஷ்ணு தான் வெற்றி பெற்றார்கள். பூர்ணிமா தோற்று விட்டார். இதனால் மாயா- பூர்ணிமா இருவருமே செம காண்டாகி விட்டார்கள் என்று சொல்லலாம். இதில் மாயா ஒரு பாயிண்ட் பெற்றிருக்கிறார். மணி இரண்டு பாய்ண்ட் பெற்று இருக்கிறார்.

பூர்ணிமா மோசமான செயல்:

விஷ்ணு 3 பாயிண்ட் பெற்று இந்த டாஸ்க்கை வெற்றி பெற்று இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் TTF வின் இரண்டாம் டாஸ்க் துவங்கி இருக்கிறது. இதில் மணி, ரவீனா, விஷ்ணு ஆகியோர் வெளியேறி இருகின்றனர். இப்படி நிலையில் இந்த டாஸ்கில் நிக்சன் வெற்றி பெற்று இருக்கிறார். இதன் மூலம் TTF points பட்டியலில் 4 புள்ளிகளுடன் நிக்சன் முன்னிலையில் இருக்கிறார். இதனை தொடர்ந்து மாயா மற்றும் விஷ்ணு இரண்டாம் இடத்திலும் பூர்ணிமா மற்றும் மணி மூன்றாம் இடத்திலும் இருக்கின்றனர்.

Advertisement