உன் சாரி செல்லாது, நிக்சனை வெளுத்து வாங்கிய வினுஷா. தப்பே இல்லை என்பது போல தற்போதும் டௌலத்தாக பேசும் நிக்சன்.

0
526
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 100 நாட்களுக்கு மேல் கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா, விசித்திரா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். மேலும், கடந்த வாரம் பணப் பெட்டி டாஸ்க் நடந்தது. இதில் பூர்ணிமா ரவி 16 லட்ச ரூபாய் பணத்துடன் வெளியேறினார். இன்னும் இந்த நிகழ்ச்சி ஒரு வாரம் தான் இருக்கிறது.

- Advertisement -

பிக் பாஸ் 7:

இதில் யார் டைட்டில் பட்டதை வெற்றி பெறுவார்கள்? என்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மேலும், இந்த வாரம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் உடைய கடைசி வாரம் என்று சொல்லலாம். தற்போது பிக் பாஸ் வீட்டில் விஜய் வர்மா, விஷ்ணு, மாயா, மணி, தினேஷ், அர்ச்சனா ஆகிய 6 பேர் தான் இருந்தனர். இதில் விஜய் வர்மா மிட் வீக் ஏவிக்ஷன் மூலம் வெளியேற்றப்பட்டார்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

ஆக மொத்தம், டைட்டிலை அடிக்கப் போவது யார் என்ற பல கேள்விகளுடனும், எதிர்பார்ப்புடனும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும், இந்த வாரத்தின் இறுதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று பிரம்மாண்டமாக பைனல் நிகழ்ச்சியை நடத்த பிக் பாஸ் குழு ஏற்பாடு செய்து இருக்கிறது. அதோடு இந்த வாரம் முழுவதும் பதிவாகும் வாக்குகள் அடிப்படையில் தான் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்று அறிவிக்கப்படுவார்கள்.

-விளம்பரம்-

வாக்குகள் பதிவு:

இதனால் போட்டியாளர்களின் ரசிகர்கள் தங்களுடைய வாக்குகளை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, அர்ச்சனாவிற்கு அதிக வாக்குகளும் ஆதரவும் பெருகி கொண்டிருக்கிறது. பைனல் நெருங்கும் வேளையில் பிக் இந்த சீசனில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே சென்ற வண்ணம் இருக்கின்றனர். நேற்றய நிகழ்ச்சியில் அனன்யா, வினுஷா,விக்ரம்,கூல் சுரேஷ் சென்று இருக்கிறார்கள்.

நிக்சனை கேள்வி கேட்ட வினுஷா :

இப்படி ஒரு நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் நிக்சன் உள்ளே சென்று இருந்தார். இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தன்னை உருவாக்கேலி செய்தது குறித்து நிக்சனிடம் நேருக்கு நேர் கேட்டு இருக்கிறார் வினுஷா. ஆனால், தற்போது ‘வேண்டுமென்றே இதை நீங்கள் மீண்டும் மீண்டும் கேட்பது போல இருக்கிறது என்று திமிராகவே பதில் அளித்துள்ளார் நிக்சன்.

Advertisement