டாஸ்கில் வென்று பூர்ணிமாவை வெறுப்பேற்றிய மணி – கடைசியில் வாங்கிய பல்ப்

0
266
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 13 வாரங்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். மேலும், கடந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. மிகவும் மொக்கையான டாஸ்க்குகளுடன் நடந்த இந்த Ticket To Finale டாஸ்க்கின் இறுதியில் விஷ்ணு வெற்றி பெற்றார்.

- Advertisement -

நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு பொறியாளரை தேர்ந்தெடுத்து அவர்கள் பிக் பாஸ் வீட்டில் கடந்து வந்த பாதை குறித்து கூற வேண்டும் என்று டாஸ்க் கொடுக்ப்பட்டது. அதில் பூர்ணிமா விஷ்ணுவையும், மாயா அர்ச்சனாவையும், விஷ்ணு பூர்ணிமாவையும், அர்ச்சனா விஜய்யையும், மணி மாயாவையும் தேர்ந்தெடுத்தனர். இதில் பூர்ணிமா விஷ்ணுவை பற்றி மணி கணக்காக பேசினார்.

மேலும், விசித்ரா, தினேஷ்ஷை பற்றி வன்மத்தை தான் கக்கினார். இதனால் தினேஷ் குறித்து விசித்ரா சொன்ன கருத்தை எந்த போட்டியாளரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் விசசித்ராவின் முகமே மாறியது. அதே போல மாயா, அர்ச்சனாவை பற்றி சொன்ன விஷயங்கள் அவரை பெருமையாக சொன்னது போல தான் இருந்தது அது அவளுக்கு ப்ளஸ் தான் என்று பொறாமையிலும் பொங்கினார் விசித்ரா.

-விளம்பரம்-

இது ஒருபுறம் இருக்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பணப் பெட்டி டாஸ்க் துவங்கி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இந்த பணப் பெட்டியில் இருக்கும் தொகை கூடவும் செய்யலாம், குறையவும் செய்யலாம் என்று அறிவித்து போட்டியாளர்களுக்கு மிகப்பெரிய ட்விட்ஸை கொடுத்துள்ளார் பிக் பாஸ். கடந்த 6 சீசன்களில் இப்படி ஒரு அறிவிப்பு அறிவிக்கப்பட்டதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த வாரம் அனைவரும் நாமினேட் ஆகி இருக்கின்றனர். இந்த பணப்பெட்டியை பூர்ணிமா அல்லது விஜய் வர்மா ஆகிய இருவரில் யாராவது எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். இதில் ஒரு சுற்றில் மணி வெற்றி பெற்று ஆட்டம் போட்டு பூர்ணிமாவை வெறுப்பேற்றினார். ஆனால், அடுத்த சுற்றில் தவறான பதிலை சொல்லி பல்ப் வாங்கி இருக்கிறார்.

Advertisement