ஒட்டுமொத்தமாக பிளான் செய்து Boring Performerஐ தேர்ந்தெடுத்த போட்டியாளர்கள். சிறைக்கு சென்ற அந்த இரண்டு பேர் யார் தெரியுமா?

0
397
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 44 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

கடந்த வாரம் நடைபெற்ற கேப்டன் டாஸ்கில் தினேஷ் வெற்றிபெற்றார். தினேஷ் வெற்றி பெற்ற இந்த வாரம் பிக் பாஸ் வீடு, பிக் பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் என்று வேற்றுமை இல்லாமல் ஒரே வீடாக இருக்கும் என்று அறிவித்தார் பிக் பாஸ். அதே போல இந்த வார நாமினேஷனில் விசித்ரா, ரவீனா, பூர்ணிமா, மணி, பிராவோ, அக்ஷயா, விக்ரம், கானா பாலா, ஆகிய 8 பேர் நாமினேட் ஆகி இருக்கின்றனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் வீட்டில் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களைப் போலவே நடந்து கொள்ள வேண்டும். இந்த டாஸ்க்கில் இந்த வார கேப்டனான தினேஷ் பங்கு பெறவில்லை. மாறாக பிக் பாஸ் அவரை தனியாக அழைத்து அவருக்கு சீக்ரெட் டாஸ்க் ஒன்றை கொடுத்திருந்தார்.

அதில் தினேஷ் எவ்வளவு தான் ட்ரிகர் செய்தாலும் கேரக்டரில் இருந்து மாறாமல் இருக்க வேண்டும் என்பதே அந்த டாஸ்க். ஆனால், இந்த டாஸ்கில் இது சீக்ரட் டாஸ்க் என்று தெரியாத விஷ்ணு தனது கட்டுப்பாட்டை இழந்து தினேஷிடம் சண்டையிட்டார். இதனால் சீக்ரட் டாஸ்க்கை சுலபமாக வென்றார் தினேஷ். இதனை தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களாக இதே டாஸ்க் தான் தொடர்ந்து வந்து இருந்தது.

-விளம்பரம்-

அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ், மீண்டும் சில டாஸ்க்குகளை கொடுத்து அதில் கானா பாலாவை நடுவராக போட்டு இருந்தார். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி என்று இரண்டாக பிரிக்கப்பட்டு இருந்தது. இந்த டாஸ்க்கில் பெண்கள் வேடமிட்டு இருந்த ஆண்கள் அணி தான் வெற்றி பெற்றது. இதனால் அந்த அணியில் இருக்கும் ஒருவருக்கு கோல்ட் ஸ்டார் கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

பின்னர் ஆண்கள் அணியினர் பேசி முடிவெடுத்து மணிக்கு கோல்ட் ஸ்டாரை கொடுத்தனர். இதனால் மாயா மற்றும் பூர்ணிமா கடுப்பாகி புலம்பி கொண்டு இருந்தனர். இப்படியாக நேற்றய எபிசோட் முடிய தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இந்த வார Boring Performerஆக விசித்ரா மற்றும் அர்ச்சனாவை தேர்ந்தெடுத்து இருக்கின்றனர். அதிலும் டைட்டில் வின்னர் சரவணன், விசித்ராவை எங்கும் பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

Advertisement