கண்டுகொள்ளாத மணி கலங்கிய ரவீனா – இன்னும் இவங்கள வச்சி உருட்டிட்டு இருக்காங்களா?

0
571
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 100 நாட்களுக்கு மேல் கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா, விசித்திரா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். மேலும், கடந்த வாரம் பணப் பெட்டி டாஸ்க் நடந்தது. இதில் பூர்ணிமா ரவி 16 லட்ச ரூபாய் பணத்துடன் வெளியேறினார். இன்னும் இந்த நிகழ்ச்சி ஒரு வாரம் தான் இருக்கிறது.

- Advertisement -

பிக் பாஸ் 7:

இதில் யார் டைட்டில் பட்டதை வெற்றி பெறுவார்கள்? என்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மேலும், இந்த வாரம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் உடைய கடைசி வாரம் என்று சொல்லலாம். தற்போது பிக் பாஸ் வீட்டில் விஷ்ணு, மாயா, மணி, தினேஷ், அர்ச்சனா ஆகிய ஐந்து பேர் தான் இருக்கிறார்கள். இதில் நேற்றய நிகழ்ச்சியில் தான் விஜய் வர்மா வெளியேற்றப்பட்டார்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

ஆக மொத்தம், டைட்டிலை அடிக்கப் போவது யார் என்ற பல கேள்விகளுடனும், எதிர்பார்ப்புடனும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும், இந்த வாரத்தின் இறுதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று பிரம்மாண்டமாக பைனல் நிகழ்ச்சியை நடத்த பிக் பாஸ் குழு ஏற்பாடு செய்து இருக்கிறது. அதோடு இந்த வாரம் முழுவதும் பதிவாகும் வாக்குகள் அடிப்படையில் தான் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்று அறிவிக்கப்படுவார்கள்.

-விளம்பரம்-

வாக்குகள் பதிவு:

இதனால் போட்டியாளர்களின் ரசிகர்கள் தங்களுடைய வாக்குகளை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, அர்ச்சனாவிற்கு அதிக வாக்குகளும் ஆதரவும் பெருகி கொண்டிருக்கிறது. மேலும், ஹாட்ஸ்டார் தளம் மூலமாக தினமும் வாக்களிக்க முடியும் என்று பிக் பாஸ் அறிவித்திருக்கிறது. அதில் மிஸ்டு கால் மூலமாகவும் வாக்களிக்கலாம் என்று விஜய் டிவி ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் தனி நம்பர் அறிவித்திருக்கிறது.

உள்ளே சென்ற ரவீனா :

பைனல் நெருங்கும் வேளையில் பிக் இந்த சீசனில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே சென்ற வண்ணம் இருக்கின்றனர். நேற்றய நிகழ்ச்சியில் அனன்யா, வினுஷா,விக்ரம்,கூல் சுரேஷ் சென்று இருந்தனர். இப்படி ஒரு நிலையில் தற்போது ரவீனா வீட்டிற்குள் சென்று இருக்கிறார். ஆனால், ரவீனாவை மணி பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்பதால் ஏன் என்னை அவாய்ட் செய்கிறாய் என்று மணியிடம் கெஞ்சி இருக்கிறார் ரவீனா.

Advertisement