உண்மைய சொல்லட்டா எனக்கு உன் மேல ஒரு பீலிங்ஸ் – அடுத்த ஜோடி ரெடி

0
386
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி 45 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் பூர்ணிமா நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். மேலும், முதல் நாளில் இருந்தே நிகழ்ச்சி அனல் பறந்து கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

அதேபோல் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் பவா, அன்னபாரதி, பிரதீப், ஐஷு ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். நேற்று பிக் பாஸ் வீட்டில் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களைப் போலவே நடந்து கொள்ள வேண்டும். இந்த டாஸ்க்கில் இந்த வார கேப்டனான தினேஷ் பங்கு பெறவில்லை. மாறாக பிக் பாஸ் அவரை தனியாக அழைத்து அவருக்கு சீக்ரெட் டாஸ்க் ஒன்றை கொடுத்திருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் 7:

இப்படி ஒரு நிலையில் இந்த டாஸ்க்கில் அனைவரும் பெரிதாக பங்கேற்கவில்லை என்று தினேஷ் பேசிக் கொண்டிருந்தார். அப்போது விஷ்ணு, இவருக்கு ஏதாவது ஒரு கேரக்டரை கொடுங்கள் என்று கூறியிருந்தார். இதனால் தினேஷ், உங்கள் கேரக்டரை நீங்கள் ஒழுங்காக செய்யுங்கள் என்று சாதாரணமாக கூறினார். ஆனால், விஷ்ணு அவரை வாயா போயா என்று பேச ஆரம்பித்து சத்தம்போட்டார். பின்னர் இவர்கள் இருவருக்கும் இப்படியே வாக்குவாதம் நீண்டு செல்ல விஷ்ணு, தினேஷை நரி என்று கூற, தினேஷ் பதிலுக்கு விஷ்ணுவை அமுல் பேபி என்றும் கூறியிருந்தார்.

தினேஷ்-விஷ்ணு சண்டை:

ஒரு கட்டத்தில் இவர்கள் சண்டை கலவரமாக மாறி இருந்தது. இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் புது காதல் ஜோடி உருவாகி இருக்கும் தகவல் தான் வைரலாகி வருகிறது. நேற்று நடந்த சண்டையில் விஷ்ணு வருத்தப்பட்டு உட்கார்ந்து பூர்ணிமாவிடம் பேசி இருக்கிறார். அப்போது அவர், நான் என்ன பொறுக்கியா? நான் இப்போது ஒரு பெண்ணை கூட்டிட்டு வந்தால் கூட எங்கள் வீட்டில் ஏற்றுக் கொள்வார்கள். நான் சிங்கிளாக தான் இருக்கிறேன். என்னை பார்த்து பொறுக்கி என்று சொல்கிறான் என்று பேசி இருக்கிறார்.

-விளம்பரம்-

புது காதல் ஜோடி:

உடனே பூர்ணிமா, நீங்க யாரு சாமி? நீங்க இப்படி பண்றது தான் எனக்கு பிடித்திருக்கிறது. நீங்க ஏதோ ஒன்னு பண்றீங்க. நீங்க செய்யறது எனக்கு பிடித்திருக்கிறது. இதை சொல்லலாமா வேணாமா என்று தெரியவில்லை. இதற்கு நீங்கள் என்ன சொல்வீர்கள் என்றும் தெரியவில்லை. எனக்கு உங்க மேல ஒரு ஃபீலிங் இருக்கிறது என்று சொல்கிறார். அதற்கு விஷ்ணு வெட்கப்பட்டு சிரிக்கிறார். இப்படி இவர்கள் பேசிருக்கும் வீடியோ தான் வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் காதல் ஜோடி:

இதை பார்த்து ரசிகர்கள், அடுத்த ஜோடி ஓகேவா, உண்மையாலுமே விஷ்ணு ஓகே சொல்வாரா? பூர்ணிமா காதலிக்கிறாரா? இல்லை நிகழ்ச்சியில் கேமை சுவாரசியமாக்க இப்படி செய்கிறாரா? என்றெல்லாம் கேட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே நிகழ்ச்சியில் மணி- ரவீனா காதல் ஜோடி சென்று கொண்டிருந்தது. அதற்கு பிறகு ஐஷு-நிக்சன் ஜோடி உருவானது. ஆனல், அது வந்த வேகத்திலேயே சென்று விட்டது. ஐசு வெளியேறியதற்கு பிறகு நிக்சன், நாங்கள் இருவரும் நல்ல நட்பாக தான் பழகி விட்டோம் என்று சொன்னார் .

Advertisement