உள்ள இருக்கவங்கள விட வெளிய இருந்து வருவன் டேஞ்சர் – Wild Card என்ட்ரியை எண்ணி கதி கலங்கும் போட்டியாளர்கள்.

0
416
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 7வது வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

கடந்த வாரம் நடைபெற்ற கேப்டன் டாஸ்கில் தினேஷ் வெற்றிபெற்றார். தினேஷ் வெற்றி பெற்ற இந்த வாரம் பிக் பாஸ் வீடு, பிக் பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் என்று வேற்றுமை இல்லாமல் ஒரே வீடாக இருக்கும் என்று அறிவித்தார் பிக் பாஸ். கடந்த வாரம் முழுதும் ஸ்டார்களுக்காக டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு இருந்தது. இதில் ரவீனா, மணி, விசித்ரா, விஷ்ணு ஆகியோர் அதிகப்படியான ஸ்டார்களை பெற்று இருந்தனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் முழுதும் நடைபெற்ற டாஸ்கில் சுவாரசியம் குறைவாக இருந்த போட்டியாளர்கள் இருவரை பிக் பாஸ் தேர்ந்தெடுக்க சொன்னார். இதில் பெரும்பாலானோர் அர்ச்சனா மற்றும் விசித்ராவை தேர்ந்தெடுத்தனர். ஆனால், எங்களை விட பிராவோ, அக்ஷயா, விக்ரம் எல்லாம் நன்றாக செய்துவிட்டார்களா என்று வாக்குவாதம் செய்த விசித்ரா, தன்னால் சிறைக்கு செல்ல முடியாது என்று தர்னா செய்தார்கள்.

இதனை தொடர்ந்து ஸ்டார் அதிகம் பெற்று இருக்கும் போட்டியாளர்கள் அவர்களுக்குள் கலந்துபேசி ஒருவருக்கும் ஸ்டார் கொடுக்கலாம். அந்த ஒரு நபர் இரண்டு நபரை அடுத்த வார நாமினேஷனுக்கு நேரடியாக நாமினேட் செய்யலாம் என்ற பவர் கொடுக்கப்பட்டது. ஆனால், இன்னும் விஷ்ணு, யாரை தேர்தெடுத்துள்ளார் என்பதை காண்பிக்கவில்லை. இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இன்று நாமினேஷனும் நடைபெற இருக்கிறது.

-விளம்பரம்-

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டில் மேலும் 3 wild card போட்டியாளர்கள் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும், போட்டியாளர்களுக்கு மூன்று டாஸ்க் கொடுக்கப்படும், அதில் வென்றால் பிக் பாஸ் வீட்டில் தொடரலாம், தோற்றால் wild card போட்டியாளருக்கு வழிவிட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறார் பிக் பாஸ்.

தற்போது 14 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் மேலும் மூன்று Wild Card போட்டியாளர்கள் உள்ளே வர இருப்பதால் தற்போது மேலும் ஆட்டம் சூடுபிடித்து இருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் Wild Card போட்டியாளர்களாக நுழைய இருக்கும் போட்டியாளர்கள் குறித்து போட்டியாளர்கள் பீதியில் இருக்கின்றனர். மேலும், யார் வரப்போகிறார்கள் என்ற மிகப்பெரிய விவாதமே சென்றுகொண்டு இருக்கிறது.

Advertisement