கமலிடம் தனது கேப்டன்சி பற்றி குறை சொன்ன மாயா&கோ – பதிலடி கொடுத்த தினேஷ்.

0
525
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 8வது வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

கடந்த வாரம் ஸ்டார் அதிகம் பெற்று இருக்கும் போட்டியாளர்கள் அவர்களுக்குள் கலந்துபேசி ஒருவருக்கு ஸ்டார் கொடுக்கலாம். அந்த ஒரு நபர் இரண்டு நபரை அடுத்த வார நேரடியாக நாமினேட் செய்யலாம் என்ற பவர் கொடுக்கப்பட்டது. இதில் விஷ்ணு, மாயா மற்றும் அக்ஷயா ஆகிய இருவரை நாமினேட் செய்தார்.பின் நாமினேஷன் நடைபெற்றது. அதில் விஷ்ணு நாமினேட் செய்த மாயா, அக்ஷயா உட்பட அர்ச்சனா, பூர்ணிமா, விசித்ரா, ரவீனா, மணி, பிராவோ ஆகியோர் நாமினேட் ஆகி இருக்கின்றனர்.

- Advertisement -

தற்போது பிக் பாஸ் வீட்டில் 14 பேர் இருக்க பாஸ் வீட்டில் மேலும் 3 wild card போட்டியாளர்கள் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும், போட்டியாளர்களுக்கு மூன்று டாஸ்க் கொடுக்கப்படும், அதில் வென்றால் பிக் பாஸ் வீட்டில் தொடரலாம், தோற்றால் wild card போட்டியாளருக்கு வழிவிட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறார் பிக் பாஸ்.

நேற்றய நிகழ்ச்சியில் ஷாப்பிங் ரீ- பேமெண்ட் டாஸ்க் கொண்டு கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கில் 7 பேர் பங்கேற்று இருந்த நிலையில் டாஸ்கில் தோற்றனர். இந்த டாஸ்கில் தோற்றதால் அடுத்த வார நம்நினேஷனுக்கு இரண்டு பேரை நேரடியாக நாமினேட் செய்ய வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்து இருந்தார். அந்த வகையில் பெரும்பாலோனோர் தினேஷ் மற்றும் ஜோவிகா ஆகிய இருவரை நாமினினேட் செய்தனர்.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து மூன்றாம் பூகம்ப டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கிலும் போட்டியாளர்கள் தோற்றுவிட்டனர். இதுவரை கொடுக்கப்பட்ட மூன்று பூகம்ப டாஸ்க் கொடுக்கப்ட்டது. இந்த மூன்று டாஸ்கில் இரண்டு பூகம்ப டாஸ்கில் தோற்றதால் இந்த வார இறுதியில் எத்தனை பேர் உள்ளே செல்ல போகிறார்கள் எத்தனை பேர் வெளியில் போவார்கள் என்பது தெரியவரும் என்றும் பிக் பாஸ் அறிவித்து இருக்கிறார்.

நேற்றய நிகழ்ச்சியில் அடுத்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க் நடைபெற்றது. இதில் விஷ்ணு, நிக்சன், ஜோவிகா ஆகியோர் பங்கேற்ற நிலையில் நிக்சன் வெற்றிபெற்றார். டாஸ்கில் தோற்றதால் ஜோவிகா கண்ணீர் விட்டு அழுதார். இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தினேஷ் கேப்டன்சி பற்றி மாயா & கோ கமலிடம் புகார் செய்ய, இங்கே ஒரு கேங் இருக்கு அதுக்கு மாயா தலைவி பூர்ணிமா தான் செயலாளர் என்று பதிலடி கொடுத்துள்ளார் தினேஷ்.

Advertisement