மீண்டும் ஒரு முன்னாள் போட்டியாளரின் மகள் – Wild Card போட்டியாளராக நுழைய இருக்கும் அந்த 5 பேர்.

0
505
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் Wild Card எண்ட்ரியாக முன்னாள் போட்டியாளரின் மகள் நுழைய இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது நான்காவது வாரம் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார். முதல் வாரமே நிகழ்ச்சி விறுவிறுப்பாகவும் கலவரமாகவும் சென்றிருந்தது. முதல் வாரம் எவிக்சன் நடக்காது என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேறி இருந்தார். பின் பவா, தன்னால் இனி நிகழ்ச்சியில் விளையாட முடியாது என்று தாமாகவே வெளியேறிவிட்டார். பின் 16 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது. மேலும், கடந்த வாரத்திற்கான நாமினேஷனில் நிக்சன்,அக்ஷயா,மணி சித்ரா, ஐசு,விஜய், மாயா, பூர்ணிமா, வினுஷா,விக்ரம் மற்றும் பிரதீப் ஆகிய 11 பேர் நாமினேட் ஆகி இருந்தனர்.

- Advertisement -

பிக் பாஸ் 7:

இதில் மாயா அல்லது பூர்ணிமா ஆகிய இருவரில் யாராவது வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக விஜய் வர்மா வெளியேற்றப்பட்டு இருந்தார். விஜய் வர்மாவின் வெளியேற்றம் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதற்கு முக்கிய காரணம் கடந்த வாரம் அவரை விட வீட்டில் சும்மா இருக்கும் பல போட்டியாளர்கள் எல்லாம் நாமினேஷனில் இடம்பெற்றனர். அவர்களை விட விஜய் வர்மா பிக் பாஸில் ஒரு கண்டன்ட் கொடுக்கும் போட்டியாளராகவே இருந்தார். இதனால் கண்டிப்பாக அவர்களை விட விஜய் வர்மாவிற்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்து இருக்கும்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

அப்படி இருக்கும் பட்சத்தில் விஜய் வர்மா வாக்குகள் அடிப்படையில் வெளியேறினாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. விஜய் வர்மாவிற்கு ஏற்கனவே எச்சரிக்கை கொடுக்கப்பட்ட நிலையில் அவர் டாஸ்கின் போது நடந்துகொண்ட விதம் அவருக்கு பிரச்சனையை ஏற்படுத்தியது. இதனால் அவருக்கு Red card கொடுத்து அனுப்ப வேண்டும் என்று பலர் கூறி வந்தனர். ஆனால், அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்படாமல் நாசுக்காக பிக் பாஸ் குழு அவரை வெளியேற்றியது. இது ஒருபுறம் இருக்க சமீபத்தில் வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் Wild card குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

Wild Card ப்ரோமோ:

வழக்கமாக பிக் பாஸ் சீசன்களில் ஒன்று அல்லது இரண்டு Wild card போட்டியாளர்கள் தான் வருவார்கள். ஆனால், இந்த முறை 5 Wild கார்ட் போட்டியாளர்கள் வர இருக்கின்றனர். எனவே இந்த வாரம் Double Eviction இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த முறை ஐந்து பேர் Wild card என்ட்ரி ஆவதற்கு காரணம், இரண்டு பிக் பாஸ் வீடுகள் இருப்பது, நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் விளையாட தெரியாதவர்கள், மந்தமாக இருப்பவர்களை அடுத்தடுத்து வெளியேற்றலாம் என்று பிக் பாஸ் முடிவு செய்து இருக்கிறது. ஆக தற்போது 15 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். Wild card 5 என்ட்ரி மூலம் அடுத்த வாரம் 20 பேர் இருப்பார்கள்.

Wild Card போட்டியாளர்கள்:

மேலும், அந்த 5 Wild Card போட்டியாளர்களில் முதல் இரண்டு Wild Card போட்டியாளர்களாக ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா மற்றும் பின்னணி பாடகர் கானா பாலா ஆகியோர் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி இதற்கு முந்தைய சீசனில் வந்து கலந்து கொண்ட திருநங்கை நமீதா மாரிமுத்துவின் மகள் பிரவீனா மாயா தான் Wild card மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர இருக்கிறார்.

நமீதா மாரிமுத்து சில வருடங்களுக்கு முன்பு தான் பிரவீனா மாயாவை மகளாக தத்து எடுத்திருந்தார். இவர்களை தொடர்ந்து சின்னத்திரையில் இருந்து ஒரு நடிகர், இன்னொரு நடிகையும் Wild card மூலம் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.இது போக மேலும் மூன்று போட்டியாளர்கள் பற்றிய விவரங்கள் விக்கிபீடியா பக்கத்திலேயே அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. அதில் மானஸி, சாம் சமுவேல்ஸ், Kpy பாலா,ஸ்ரீதேவி விஜயகுமார் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்று இருக்கிறது.

Advertisement