பிக் பாஸ் 9 நிகழ்ச்சி தொடங்க இருக்கும் அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி வருடம் வருடம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சி எட்டு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சி பல பேரின் கேரியருக்கும், பலரின் வாழ்க்கைக்கு துணையாகவும் இருக்கிறது. இந்த நிகழ்ச்சி எந்த அளவுக்கு பிரபலமோ அந்த அளவுக்கு பிக் பாஸ் வீடும் பிரபலம்.

இந்த பிக் பாஸ் வீட்டை பார்ப்பதற்காகவே நிகழ்ச்சியை பார்க்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. முதல் ஏழு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி இருந்தார். கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய பின் கடந்த எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி இருந்தார். இவரின் பேச்சும் கருத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், முதல் சீசனில் ஓவியா டைட்டில் பெற்றிருந்தார்.
பிக் பாஸ் 9:
இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகேன் ராவ், நான்காவது சீசனில் ஆரி, ஐந்தாவது சீசன் ராஜி, ஆறாவது சீசனில் அசிம், ஏழாவது சீசனில் அர்ச்சனா, கடைசியாக எட்டாவது சீசனில் முத்துக்குமரன் டைட்டில் வின்னர் ஆகியிருந்தார்கள். கடந்த எட்டாவது சீசனில் வீடு பிக் பாஸ்-சுமால் பாஸ் என்று இரண்டாக பிரித்து வித்தியாசமாக நடத்தி இருந்தார்கள். இதை அடுத்து கடந்த சில வாரங்களாக பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி குறித்து அப்டேட் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://www.youtube.com/watch?v=Ysp9H8VLLrk
நிகழ்ச்சி குறித்த அப்டேட்:
இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்க இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு தான் இந்த நிகழ்ச்சி தொடர்பாக புரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டு இருந்தது. இதை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்களின் பட்டியல்கள் சோசியல் மீடியாவில் வெளியான வண்ணம் இருக்கிறது. ஆனால், அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகவில்லை. இதை அடுத்து பிக் பாஸ் 9 நிகழ்ச்சி தொடர்பான டீசர் வெளியாகி இருந்தது.

பிக் பாஸ் 9 ஆரம்பம்:
இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி குறித்த ஒரு சுடச்சுட அப்டேட் தான் வெளியாகியிருக்கிறது. அதாவது, அக்டோபர் மூன்றாம் தேதி விஜய் சேதுபதி பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று சுற்றிக் காட்ட இருக்கிறார். அதற்கு அடுத்த நாள் பிக் பாஸ் சீசன் 9 உடைய முதல் எபிசோட் சூட்டிங் நடைபெறுகிறது. அடுத்த நாள் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் எபிசோடு ஒளிபரப்பாகிறது. அதிலிருந்து நூறு நாட்கள் பிக் பாஸ் கொண்டாட்டம் தொடங்க இருக்கிறது என்று கூறப்படுகிறது.






