இங்க வீடும் பெருசு கலாட்டாவும் பெருசு - வெளியான பிக் பாஸ் 5வின் அடுத்த ப்ரோமோ.

By ·

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சமீபத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. இந்த சீசனில் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்து இருந்தனர். தமிழில் ஒளிபரப்பாவது போல ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

https://www.youtube.com/watch?v=lnXXsVWcF6A

கடந்த ஆண்டு கூட பிக் பாஸ் நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகிறது என்ற செய்திகள் கூட வெளியானது. ஆனால், அதனை முற்றிலும் மறுத்தது எண்டிமால் நிறுவனம். இப்படி ஒரு நிலையில் அடுத்த சீசன் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தது.

இதையும் பாருங்க : Survivor நிகழ்ச்சிக்காக அர்ஜுனை Money Heist ப்ரோபசருடன் ஒப்பிட்டு ஜீ தமிழ் போட்ட மீம் - ரசிகர்களின் கமன்ட்ஸை பாருங்க.

ஆனால், அடுத்த சீசனும் விஜய் டிவியில் தான் ஒளிபரப்பாக இருகிறது என்று உறுதியாகிவிட்டது. வரும் அக்டோபர் மாதம் பிக் பாஸ் 5 நிகழ்ச்சி துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ ஷூட்டில் கமல் கலந்துகொண்டுஇருந்தார்.

ப்ரோமோ ஷூட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் லீக் ஆகி இருந்தது. அக்டோபர் மாதம் பிக் பாஸ் 5 நிகழ்ச்சி துவங்கும் என்று தகவல் வெளியானது. அதே போல செப்டம்பர் மாதம் பிக் பாஸ் ப்ரோமோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் முதல் ப்ரோமோ வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் அடுத்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full