Survivor நிகழ்ச்சிக்காக அர்ஜுனை Money Heist ப்ரோபசருடன் ஒப்பிட்டு ஜீ தமிழ் போட்ட மீம் – ரசிகர்களின் கமன்ட்ஸை பாருங்க.

0
992
money
- Advertisement -

தற்போது வளைர்ந்து வரும் நவீன சினிமா உலகில் சினிமாவிற்கு இணையாக ‘வெப் சீரிஸ்’ எனப்படும் இணையதள தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று விடுகிறது. Amazon,Netflix போன்ற ஆன்லைன் OTT தளங்களில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் தற்போது உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது. அந்த வகையில் Netflix OTT தளத்தில் ஒளிபரப்பாகி வரும் ‘Money Heist ‘ தொடர் உலகளவில் பிரபலமானது.

-விளம்பரம்-

இந்த கதையில் ஆண்கள் கதாபாத்திரத்தில் ப்ரொஃபஸர், பெர்லின்,பொகோட்டா,சுவாரஸ் என்று பல இருந்தாலும் இவர்களுக்கு இணையாக பெண்கள் கதாபாத்திரத்தில் டோக்கியோ, நைரோபி, ரேக்யூல் என்று பலர் ரசிகர்களை கவர்ந்தனர். மேலும், இந்த Money Heist தொடரில் நடித்த அனைவரும் உலக அளவில் பிரபலமடைந்தார்கள்.

- Advertisement -

அதே போல் இந்த கதையின் நாயகன் ப்ரொஃபஸர் கதாபாத்திரம் தான். இப்படி ஒரு நிலையில் ப்ரொஃபஸர் கதாபாத்திரத்தையும் Survivor நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அர்ஜுனையும் ஒப்பிட்டு ஜீ தமிழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீம் ஒன்றை போட்டு இருந்தது. இதை பார்த்த பலர், money heistடை Survivor நிகழ்ச்சியோடு ஒப்பிட வேண்டாம் என்று கேலி செய்து வருகின்றனர்.

ஜீ தமிழில் விரைவில் துவங்க இருக்கும் Survivor நிகழ்ச்சி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த ஷோவில் விஜயலக்ஷ்மி, பிகில் பட நடிகை காயத்ரி, ஸ்டண்ட் மாஸ்டர் பெசன்ட் நகர் ரவி, விக்ராந்த், ஸ்ரிஷ்டி டாங்கே, vj பார்வதி, நடிகர் நந்தா, தம்பி ராமய்யா மகன் உமாபதி என்று பலர் பங்கேற்க இருக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement