வனிதாவின் முன்னாள் காதலர், சிம்பு சர்ச்சை சீரியல் நடிகை, விவாகரத்தான விஜய் டிவி நடிகை – பிக் பாஸ் போட்டியாளர்கள் யார் யார் ?

0
371
biggboss6
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் இறுதி பட்டியல் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் மத்தியில் பேராதரவைப் பெற்று வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதுவரை 5 சீசன் முடிவடைந்து இருக்கிறது. அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் தான் வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ராஜிவ் முதல் இடத்தை பிடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து தமிழில் புது வித்தியாசமான முயற்சியில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சி தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வந்தது. இதில் முதல் பரிசை பாலாஜி முருதாசும், இரண்டாம் பரிசை நிரூப்பும் பிடித்து இருந்தார்கள். இதனை அடுத்து அனைவரும் எதிர்பார்த்து காத்து இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் துவங்க இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது. இதனால் நாளுக்கு நாள் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி:

ரசிகர்கள் மத்தியிலும் இந்த சீசனில் யார் யார் எல்லாம் கலந்துகொள்ளப்போகிறார்கள்? என்ற ஆர்வம் ஆரம்பித்து விட்டது. அதேபோல் கமல் தான் இந்த சீசனை தொகுத்து வழங்க தான் என்று கூறப்படுகிறது. அதற்கான ப்ரோமோக்கள் வெளியாகி இருந்தது. இந்த முறை நிகழ்ச்சியில் கொஞ்சம் வித்தியாசமாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த வகையில் பொது மக்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியின் போட்டியாளர்களை தேர்வு செய்வதில் சேனல் தரப்பில் இருந்து கூடுதல் கவனம் செய்யப்பட்டு வருகிறது.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

மேலும், இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாக போகிறது. தினமும் டிவியில் ஒரு மணி நேரம் அதாவது 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும். பின் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. கிட்டத்தட்ட போட்டியாளர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டனர். தற்போது ஒவ்வொரு போட்டியாளர்களுடனும் பேசி அவர்களுடைய சம்பளம் மற்றும் பிற விஷயங்களை பிக் பாஸ் குழு இறுதி செய்து வருகின்றனர். இந்நிலையில் போட்டியாளர் குறித்த இறுதி பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் கசிந்துள்ளது.

-விளம்பரம்-

ராபர்ட்:

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடன இயக்குனர் ஆவார் ராபர்ட். இன்னும் சொல்லப்போனால் வத்திக்குச்சி வனிதாவின் முன்னாள் கணவர் ஆவார். ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா பங்கேற்று இருந்தார். தற்போது வனிதாவின் முன்னாள் கணவர் ராபர்ட் பங்கேற்பதாக கூறப்படுகிறது.

ரக்ஷிதா:

சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ரக்ஷிதா. இவர் விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் என பல சேனல்களில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு தான் ரக்ஷிதா நடித்த இது சொல்ல மறந்த கதை சீரியல் முடிவடைந்து இருக்கிறது. இதனை அடுத்து இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

விசித்ரா:

தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் விசித்ரா. இவர் ஜாதி மல்லி என்ற படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் கிளாமர் கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். பின் இவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சின்னத்திரை பக்கம் வந்து இருக்கிறார் விசித்ரா. தற்போது பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ள இருக்கிறார்.

வி ஜே அர்ச்சனா:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் தொடர்களில் ஒன்று ராஜா ராணி 2. இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் அர்ச்சனா. இவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ள இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

மதுரை முத்து:

காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் முத்து. அதற்குப்பின் சில படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். ஆனால், சோசியல் மீடியா பிரபலம் ஜிபி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று கூறப்பட்ட நிலையில் மதுரை முத்துவே பிக் பாஸில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

சிவகுமார்:

நடிகை சுஜா வருணியின் கணவர் சிவகுமார். இவர் சிவாஜியின் பேரன் ஆவார். இவரும் சில படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும், இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்படவில்லை. சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் ஜோடிகள் 2 என்ற நடன நிகழ்ச்சியில் இவர் சுஜாவரணியுடன் பங்கேற்று இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார். தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

ஜாக்லின்:

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார் ஜாக்லின். அதற்கு பின்பு தேன்மொழி பி ஏ என்ற சீரியலில் நடித்து இவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

நடிகை தீபா ஷங்கர்:

சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தீபா சங்கர். இவர் வெள்ளித்திரையில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். குறிப்பாக டாக்டர் படத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கிறார் தீபா. தற்போது இவர் சின்னத்திரை, வெள்ளி திரையில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இவரை அடுத்து சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி, தர்ஷா குப்தா, விஜே மகேஸ்வரி, அந்தோணி தாசன், மைனா நந்தினி, கூல் சுரேஷ், நடிகர் மகேஷ், டான்ஸ் மாஸ்டர் மணிகண்டன் இப்படி பல பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வருகிறது. இதில் யாரெல்லாம் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்ற பட்டியல் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement