ஆரிக்கு ஒரு நியாயம் சுரேஷ்க்கு ஒரு நியாயமா – பாலாஜி, அர்ச்சனாவின் டபுள் கேம். இந்த வீடீயோவை பாருங்க புரியும்.

0
18434
aari
- Advertisement -

நேற்றய நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு ஒரு ஜாலியான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் வட்டமாக அமர்ந்து கொண்டு தங்கள் கையில் இருக்கும் பெட்டியை மற்றவரிடம் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது வேல்முருகன் பாடலை பாடிக் கொண்டே இருப்பார். வேல்முருகன் பாடலை நிறுத்தியவுடன் யார் கையில் அந்த பெட்டி இருக்கிறதோ, அவர்கள் ஆட்டத்திலிருந்து வெளியேறுவார்கள். மேலும், அந்த நபர் யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்து ஏதாவது ஒரு டாஸ்கை செய்யச் சொல்லவேண்டும். இவ்வாறாக அந்த டாஸ்க் அமைந்திருந்தது

-விளம்பரம்-

இந்த டாஸ்கின் போது ஒவ்வொருவராக வெளியே வர ஒரு கட்டத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி, ஆரி, சம்யுக்தா, சோம் சேகர் ஆகியோர் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது வேல் முருகன் பாடலை நிறுத்திய போது சம்யுக்தாவிடமிருந்து பெட்டி மாறியபோது ஒரு பிரச்சனை ஏற்பட்டது. இருவருமே தங்கள் கையில் பெட்டி இருந்ததை ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், ஆரம்பத்தில் அனைவரும் சம்யுக்தாவின் பெயரைத்தான் சொன்னார்கள். ஆனால் பாலாஜி இல்லை இறுதியில் ஆரியின் கையில் பட்டது என்று கூறினார். அதன் பின்னர் ஆரியம் ஒப்புக் கொண்டு ஆட்டத்தில் இருந்து வெளியேறினார்.

- Advertisement -

இறுதியில் சோம் சேகர் சுரேஷ் சக்ரவர்த்தி சமித்தா ஆகிய 3 பேர் மட்டும் விளையாடிக்கொண்டிருந்தார்கள் அப்போது வேல்முருகன் பாட்டை நிறுத்தியதும் சோம் சேகர் கையிலிருந்து சுரேஷிற்கு அந்த பெட்டி மாறியது உடனே அனைவரும் சோம் சேகர் என்றுதான் கூறினார்கள் ஆனால் சுரேஷ் கொஞ்சம் நேர்மையாக இல்லை என்னுடைய கை பட்டு விட்டது என்று கூறினார் இதனால் கடுப்பான எனக்கும் எதிரான சொன்னீர்கள் இப்போது சுரேஷ் சாருக்கு கைப்பற்றிவிட்டது தானே என்று கூறினார் ஆனால் பாலாஜி இல்லை பாடல் முடியும்போது சோம் சேகர் கையில் தான் இருந்தது அதன் பின்னர்தான்சுரேஷ் கை பட்டது என்று கூறினார்.

அதே போல அர்ச்சனா கூட, பாடல் முடியும் போது சோமிடன் தான் பேட்டி இருந்தது என்று கூறினார். ஆனால் இந்த வீடியோவில் பார்த்தால் தெளிவாக தெரியும் சம்யுக்தா கையிலிருந்து அரியிடம் அந்த பெட்டி மாறும்போது பாடல் முடிந்த பின்னர்தான் சம்யுக்தா ஆரி கையில் கொடுப்பார். ஆனால் அப்போது பாலாஜியோ, கை பட்டு விட்டது என்று கூறினார் இதனால்தான் ஆரியும் அந்த டாஸ்க்கை செய்தார். ஆனால் ஆரி யாருக்கு டாஸ்க் கொடுத்தார் என்பதை கூட நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பவில்லை. அவ்வளவு ஏன் நேற்று பட்டிமன்றத்தில் கூட அரி பேசியதை ஒளிபரப்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement