வடக்கு யூடுயூப் பக்கத்தை பார்த்து டாஸ்க்கை காப்பி அடிக்கும் பிக் பாஸ் கிரியேட்டீவ் டீம் – வைராலகும் வீடியோக்கள்.

0
376
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 7வது வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

தற்போது பிக் பாஸ் வீட்டில் 14 பேர் இருக்க பாஸ் வீட்டில் மேலும் 3 wild card போட்டியாளர்கள் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும், போட்டியாளர்களுக்கு மூன்று டாஸ்க் கொடுக்கப்படும், அதில் வென்றால் பிக் பாஸ் வீட்டில் தொடரலாம், தோற்றால் wild card போட்டியாளருக்கு வழிவிட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறார் பிக் பாஸ்.

- Advertisement -

தற்போது 14 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் மேலும் மூன்று Wild Card போட்டியாளர்கள் உள்ளே வர இருப்பதால் தற்போது மேலும் ஆட்டம் சூடுபிடித்து இருக்கிறது. இது ஒருபுறம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்களில் மூவர் தான் Wildcard போட்டியாளராக வருவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் விஜய் வர்மா, அனன்யா, வினுஷா ஆகிய மூவர் உள்ளே வர இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்காக ஏற்கனவே டாஸ்க்குகள் துவங்கப்பட்டு நேற்றய நிகழ்ச்சியில் முதல் பூகம்ப டாஸ்க் கொடுக்கட்டது. இதில் தினேஷ் மற்றும் விஷ்ணு பங்கேற்று இருந்தனர். ஆனால், இருவரும் இந்த டாஸ்க்கில் தோற்றுவிட்டனர். இதனை தொடர்ந்து மணி மற்றும் நிக்சன் இந்த டாஸ்கில் பாகேற்றனர். இதிலும் இருவரும் டாஸ்கில் வெற்றி பெற்றனர். இதனை தொடர்ந்து ப்ரவரோ மற்றும் விக்ரம் பங்கேற்று இருந்தனர். இதில் இருவரும் தோற்றனர்.

-விளம்பரம்-

விசித்ரா, அர்ச்சனா இருவரும் விளையாடி தோற்றனர். இதனால் முதல் பூகம்ப டாஸ்கில் பிக் பாஸ் போட்டியாளர்கள் தோற்றதால். இந்த வார இறுதியில் Wild Card போட்டியாளர்கள் உள்ளே நுழைவது உறுதியாகிவிட்டதாக பிக் பாஸ் அறிவித்தார். மேலும், இனி மீதம் இருக்கும் இரண்டு பூகம்ப டாஸ்கை பொறுத்து எத்தனை Wild Card என்பது உறுதியாகும் என்றும் பிக் பாஸ் அறிவித்து இருந்தார்.

இந்த சீசன் ஆரம்பித்தது முதலே டாஸ்க்குகள் அனைத்தும் மிகவும் மொக்கையாக தான் இருந்து வருகிறது. அதிலும் இந்த டாஸ்க்குகள் அனைத்தும் பால்கள் அடிப்படையில் தான் இருந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் பிக் பாஸில் கொடுக்கப்படும் டாஸ்க்குகள் அனைத்தும் ஒரு வடக்கு யூடுயூப் சேனை பார்த்து காபி அடித்து இருக்கிறது பிக் பாஸ் கிரியேட்டிவ் டீம். தற்போது இந்த விஷயம் சமுக வலைத்தளத்தில் கேலிக்கு உள்ளாகி வருகிறது.

Advertisement