விவாகரத்து ஆன கையேடு பிக் பாஸில் கலந்து கொண்ட நடிகர் - யார் தெரியுமா ?

By Rajkumar · 7/9/2020

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. மிழை போலவே ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சமயத்தில் அனைத்து மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டு இருந்திருக்கும். ஆனால், தற்போது தமிழில் கொரோனா பிரச்சனை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்படாமல் இருக்கிறது.

https://www.instagram.com/p/CEzczfAhyXE/

ஆனால், தமிழில் ஏற்கனவே இரண்டு ப்ரோமோ வெளியாகிவிட்டது. மேலும், அடுத்த மாதம் 4 அல்லது 11 ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை போலவே தெலுங்கிலும் இதுவரை மூன்று சீசன்கள் நிறைவடைந்து உள்ளது. பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியின் முதல் சீசனை முதல் சீசனை ஜூனியர் NTR தொகுத்து வழங்கி வந்தார். இரண்டாவது சீசனை நாணி தொகுத்து வழங்கி இருந்தார்.

இதையும் பாருங்க : ஆறு மாதம் கழித்து தனது மகளின் முகத்தை காட்டிய ரியோ - இதான் பெயராம். இது என்ன புது ட்ரெண்ட்டா ?

ஆனால், முதல் சீசனை போல இரண்டாவது சீசன் வரவேற்பை பெறவில்லை இதனால் மூன்றாவது சீசனை நாகர்ஜுனா தொகுத்து வழங்கி இருந்தார்.இந்த நிலையில் பிக் பாஸ் 4 தெலுங்கு நிகழ்ச்சி கோலாகலமாக துவங்கியது. மேலும், இந்த சீசனில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் நடிகர்கள், தொகுப்பாளர், யூடுயூப் பிரபலங்கள் என்று பலர் கலந்து கொண்டு உள்ளனர். அந்த வகையில் விவாகரத்து பெற்று ஒரு வாரமே ஆன நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் நடிகர் நோயல் சீன்.

https://www.instagram.com/p/CE1KjkOhOi2/

நோயல் சீன் வேறு யாரும் இல்லை நானி நடிப்பில் வெளியான நான் ஈ படத்தில் நானியின் நண்பனாக நடித்தவர் தான். இவர், நடிகையும் பாடகியுமான எஸ்தர் நோரன்ஹா என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் திருமணம் கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்த நிலையில் நோயல் மற்றும் எஸ்தர் நோரன்ஹா இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் சட்ட ரிதியாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். விகாகரத்து பெற்ற கையோடு தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் நோயல்.

behindtalkies AMP · Quick view
View full