ஆறு மாதம் கழித்து தனது மகளின் முகத்தை காட்டிய ரியோ – இதான் பெயராம். இது என்ன புது ட்ரெண்ட்டா ?

0
13562
rio
- Advertisement -

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு பல்வேறு நடிகர் நடிகைகள் சென்றுள்ளார்கள் அதிலும் குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்த பல்வேறு கலைஞர்கள் தற்போது சினிமாவில் ஜொலித்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் தொடங்கி தொகுப்பாளினியாக இருந்த ஜாக்லின், ரக்சன் வரை தமிழ் சினிமாவில் கால்பதித்து விட்டனர். அந்த வகையில் தற்போது சினிமாவின் நியூ என்ட்ரியாக வருகை தந்திருப்பவர் பிரபல தொகுப்பாளர் ரியோ ராஜ்.

-விளம்பரம்-

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ரியோ. கனா காணும் காலங்கள் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடவே ரியோ ராஜ் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான ஒருமுகமாக மாறிவிட்டார். அதன் பின்னர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பல ஆண்டுகள் பணிபுரிந்து வந்தார் ரியோ.

- Advertisement -

ரியோ, சன் மியூசிக்கில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியலான சரவணன் மீனாட்சியின் மூன்றாவது சீஸனில் நடித்திருந்தார்.எதிர்பார்த்தது போல அந்த தொடரும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது இதை தொடர்ந்து சினிமாவில்இவருக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. விஜய் தொலைக்காட்சியில் தற்போது சினிமாவில் வெற்றிகரமான நடிகராக நடித்து வரும் சிவகார்த்திகேயன் நடிகர் ரியோவை வைத்து தனது சொந்த தயாரிப்பில் எடுத்த நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற படத்தில் ஹீரோவாக களம் இறங்கினார் நடிகர் ரியோ. அந்த திரைப்படம் ஓரளவிற்கு வெற்றியை அடைந்திருந்தது.

தற்போது ரியோ, பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் ரியோ, கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி ஆம் தேதி, ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து ஆறு மாதம் கழித்து தனது மகளின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் ரியோ. மேலும், தங்களது மகளுக்கு ரியோ(rio) மற்றும் ஸ்ருதி (sruthi)என்ற பெயரில் இருந்து பாதி பாதியை எடுத்தி ‘ரித்தி’ என்று பெயர் வைத்துள்ளனர். சஞ்சீவ் மானசா ஜோடி கூட தங்களது மகளுக்கு இருவரின் பெயரை இணைத்து அய்லா என்று பெயர் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement