பிக் பாஸ் 4-ல் கலந்து கொண்ட 16 போட்டியாளர்கள் – முழு லிஸ்ட் இதோ.

0
55867
bigg
- Advertisement -

கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழை போலவே ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சமயத்தில் அனைத்து மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டு இருந்திருக்கும். ஆனால், தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்படாமல் இருக்கிறது.

-விளம்பரம்-

தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை போலவே தெலுங்கிலும் இதுவரை மூன்று சீசன்கள் நிறைவடைந்து உள்ளது. பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியின் முதல் சீசனை முதல் சீசனை ஜூனியர் NTR தொகுத்து வழங்கி வந்தார். அவருக்கு நல்ல வரவேற்பு, ரசிகர்களும் அதிகம் என்பதால் சம்மந்தப்பட்ட சானல் முன்னேற்றம் கண்டது.இதனால் இரண்டாவது சீசனிலும் அவரையே கமிட் செய்ய திட்டமிட்டனர்.

- Advertisement -

ஆனால், அந்த சமயம் என் டி ஆருக்கு தேதி கிடைக்காததால் நடிகர் நாணியை இரண்டாம் சீசனின் தொகுப்பாளராக ஒப்பந்தம் செய்த்தனர். ஆனால், முதல் சீசனை போல இரண்டாவது சீசன் வரவேற்பை பெறவில்லை இதனால் மூன்றாவது சீசனை நாகர்ஜுனா தொகுத்து வழங்கி இருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் 4 தெலுங்கு நிகழ்ச்சி கோலாகலமாக துவங்கியது.

இந்த சீசனில், கலந்துகொண்டுள்ள 16 பிரபலங்களின் லிஸ்ட்,

-விளம்பரம்-

1. Monnal Gajjar (நடிகை)

2. Surya Kiran (இயக்குனர்)

3. Lasya (தொகுப்பாளர்)

4. Abijeet (நடிகர்)

5. Sujatha (தொகுப்பாளர்)

6. Mehaboob Dilse (யூடியூப் பிரபலம்)

7. Devi Nagavalli (தொகுப்பாளர்)

8. Dethadi Harika (யூடியூப் பிரபலம்)

9. Syed Sohail (நடிகர்)

10. Ariyana Glory (தொகுப்பாளர்)

11. Amma Rajasekar (நடன இயக்குனர்)

12. Karate Kalyani (நடிகை)

13. Noel Sean (பாடகர்)

14. Divi (நடிகை)

15. Akil Sarthak (நடிகர்)

16. Gangavva (யூடியூப் பிரபலம்)

தெலுங்கில் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியுள்ள நிலையில் தமிழில் இன்னும் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி துவங்கும் தேதி அறிவிக்கப்படவில்லை. இதுவரை தமிழில் 2 ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில் அடுத்த மாதம் 4 ஆம் தேதி அல்லது 11 ஆம் தேதி பிக் பாஸ் 4 துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, இந்த சீசனில் கலந்துகொள்ளப்போகும் பிரபலங்களின் பெயர்களும் இணையத்தில் கசியத்துவங்கியுள்ளது.

Advertisement