பா ஜ கவில் சேர்ந்த மனைவி – போட்டியாக அரசியலில் நுழையும் தாடி பாலாஜி. என்ன ஆக போதோ

0
1296
Balaji
- Advertisement -

தாடி பாலாஜி அரசியலில் நுழைய இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் தாடி பாலாஜி. 1997 ஆம் ஆண்டு பிரகாஷ்ராஜ் மற்றும் சுகாசினி நடிப்பில் வெளிவந்த நந்தினி திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியிருந்தார். அதற்கு பின் இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் பெரும்பாலும் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் தான் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் பணிபுரிந்து இருக்கிறார். பின் இவர் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார். பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பாலாஜி கலந்து கொண்டிருந்தார்.

- Advertisement -

தாடி பாலாஜி குடும்ப பிரச்சனை:

அதோடு இந்த நிகழ்ச்சியில் இவருடைய மனைவி நித்யாவும் கலந்து கொண்டிருந்தார். சில ஆண்டுகளாகவே தாடி பாலாஜிக்கும் அவருடைய மனைவி நித்யாவிற்கும் இடையே பிரச்சனை இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. இவர்களுடைய விவகாரம் கோர்ட் வரை சென்றிருக்கிறது. தற்போது இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இருந்தாலும், இவர்களுக்கு மத்தியில் சர்ச்சை நிலவிக் கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் கூட நித்யா தன்னுடைய கணவர் பாலாஜி மீது புகார் அளித்திருந்தார்.

தாடி பாலாஜி அளித்த பேட்டி:

இந்த நிலையில் தாடி பாலாஜி அவர்கள் அரசியலில் நுழைய இருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சென்னை அயனாவரம் சயானி பேருந்து நிறுத்தம் அருகில் வரும் உபகரண அறக்கட்டளையின் சார்பாக தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் தாடி பாலாஜி கலந்து கொண்டிருந்தார். இவற்றை அங்குள்ள மக்களுக்கு வழங்கி இருக்கிறார். இதனை அடுத்து இவர் செய்தியாளரை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார்.

-விளம்பரம்-

அரசியலில் நுழையும் பாலாஜி:

அதில் அவர், நான் கட்டாயம் அரசியலுக்கு வர இருக்கிறேன். எனக்கு அங்கீகாரம் கொடுக்கும் கட்சிகளோடு இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். கட்சியில் புதுமையான முறையில் தனித்துவமாக செயல்படுவேன். போதைப் பொருள்களை பொறுத்தவரையில் அதனை உபயோகிப்பவர்கள் நினைத்தால் மட்டுமே முற்றிலும் தடுக்க முடியும். தற்போது பொது தேர்வுகள் முடிந்து அடுத்த கட்டமாக மாணவர்களை கல்லூரிக்கு அனுப்புவதற்காக பெற்றோர்கள் வெயில் என்பதை கூட பொருட்படுத்தாமல் ஒவ்வொரு கல்லூரிகளாக அலைந்து திரிகிறார்கள். இதைக் கருத்தில் கொண்டு நன்றாக படிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். சமீபத்தில் தான் தாடி பாலாஜி மனைவி நித்யா பா ஜ க கட்சியில் சேர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement