Gp முத்து பிக் பாஸுக்கு போக தாமரை செல்வி தான் காரணமா ? தாமரை செல்வியிடம் போனில் அவர் சொன்ன விஷயம்.

0
471
thamarai
- Advertisement -

ஜி பி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆசை பட்டத்தற்கு காரணம் இதுதான் என்று தாமரை அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. டிக்டாக் நண்பர்களே என்ற வார்த்தையின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜி பி முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ஜி பி முத்து. இவர் 3ஆவது வரை தான் படித்து இருக்கிறார். இவரது நெல்லை பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் யூடுயூப், இன்ஸ்டாகிராம் என்று எல்லா சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானார்.

-விளம்பரம்-
gpmuthu

அதிலும் யூடுயூப்சேனலில் இவர் பதிவிடும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் என்று சொல்லலாம். ஸ்டூடியோ கிடையாது , கவர்ச்சி புகைப்படம் கிடையாது, எடிட் கிடையாது , வித விதமான துணி கிடையாது, பார்வையாளர்களை சப்ஸ்கிரைப் செய்ய சொல்வது கிடையாது, இருப்பினும் வேகமாக வளரும் யூடுயூப் சேனல். மேலும், யூடுயூபில் இவருக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து தான் இவருக்கு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து இருந்தது.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து:

அதோடு ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்கள் கண்ணும் ஜிபி முத்து மீது தான் இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து கலக்கி கொண்டு இருந்தார். இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே அதிகமான ரசிகர்களை கொண்டது ஜி பி முத்து தான். ஆனால், இவர் குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இது பலருக்குமே ஷாக்கை கொடுத்திருக்கிறது. மேலும், இவர் பிக் பாஸ் வீட்டில் கிட்டத்தட்ட 14 நாட்கள் இருந்திருக்கிறார்.

gpmuthu

ஜிபி முத்து நடித்த படம்:

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பிருந்ததை விட அதிகமாக ஜிபி முத்துவிற்கு ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது . மேலும், நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு ஜி பி முத்து சன்னி லியோனுடன் இணைந்து நிகழ்ச்சி ஒன்றில் கடந்திருந்தார். இவர் சன்னி லியோனுடன் இணைந்து ‘Oh My Ghosh’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். காமெடி நடிகர் சதீஷ், குக்கு வித் கோமாளி தர்ஷா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து இருக்கிறார்கள். கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது.

-விளம்பரம்-

தாமரை அளித்த பேட்டி:

இந்நிலையில் ஜிபி முத்து குறித்து பிக் பாஸ் தாமரை அளித்திருக்கும் பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் தாமரை அவர்கள் பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி ஒன்று கொடுத்து இருந்தார். அதில் அவர் ஜி பி முத்து குறித்து கூறியிருந்தது, ஜி பி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போவதற்கு முன்பே எனக்கு செய்து பேசியிருந்தார்.

ஜிபி முத்து பிக் பாஸ் போக காரணம்:

அப்போது அவர், உங்களை பார்த்து தான் பிக் பாஸ் போக ஆசை வந்தது என்று சொன்னார். உடனே நான், அண்ணா சமாளிச்சிருவீங்களான்னு கேட்டேன். பின் நான் நிகழ்ச்சியில் அப்படி, இப்படி நடக்கும் என்று சொன்னேன் என்று பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து இருந்தார். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement