மீராவை பற்றி தர்சனுக்கும் தெரியும்.! இவர்கள் இருவருக்கும் உள்ள தொடர்பை கேட்டா ஷாக்காவீங்க.!

0
8700
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாகவே மீராமி துனின் பிரச்சினையை தான் ஹைலைட்டாக இருந்து வருகிறது. நடிகையும் மாடல் அழகியுமான மீரா மிதுன் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் இருந்து இவருக்கும் அபிராமி மற்றும் சாக்க்கும்ஷி அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருக்கிறது. மீரா மிதுன் பற்றியும் அவர் செய்த மோசடி பற்றியும் தனக்கு ஏற்கனவே தெரியும் என்பதால்தான் அவரை வெறுப்பதாக அபிராமி வெளிப்படையாகவே கூறி இருந்தார். இந்த நிலையில் மீரா மிதுன் பற்றி தர்ஷனும் அறிவார் என்று தற்போது தெரியவந்துளளது.

-விளம்பரம்-

இதையும் பாருங்க : காவல் துறை அதிகாரிகளை தாறு மாறாக தாக்கிய குடி போதை ஆசாமியின் தற்போதைய நிலை.! 

- Advertisement -

பெங்களூருவை சேர்ந்த தமிழ்செல்வி என்பது தான் மீரா மிதுனின் உண்மையான பெயர், மிஸ் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு, மிஸ் கியூன் ஆப் சவுத் இந்தியா ஆகிய பட்டங்களை வென்றுள்ளார். இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னை வடபழனியில் தமிழக பெண்கள் பங்குபெறும் மிஸ் தமிழ்நாடு திவா என்ற அழகி போட்டி ஒன்றை நடத்த உள்ளதாக இருந்தார்.  

ஆனால், அதனை தடுக்கும் விதமாக, போலீசார் உள்பட பலர் தனக்கு மிரட்டல் விடுத்துவருவதாகவும்,  தனது அந்தரங்க புகைபடங்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டுவதாகவும் மீரா மிதுன் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், மீரா மிதுன் கூறும் அனைத்தும் பொய் என்றும் அவர் அழகி என்ற பெயரில் பலரிடம் பண மோசடி செய்துள்ளதாகவும் பிரபல ஈவென்ட் ஆர்கனைசஸர் ஜோ மைக்கல் என்பவர் தெரிவித்திருந்தார்.

-விளம்பரம்-

இது ஒரு புறம் இருக்க தாங்கள் வழங்கிய பட்டத்தை வைத்துக்கொண்டு மோசடி வேலைகளில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மிஸ் தென் இந்தியா அமைப்பு கூறியது. அதோடு தாங்கள் கொடுத்த பட்டத்தை இனி மீரா மிதுனால் வேறு எங்கும் பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்தது. இதனால் அந்த போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த சனம் ஷெட்டிக்கும் வழங்கபட்டது.

பெங்களூரை பூர்வீகமாக கொண்ட சனம் ஷெட்டி, தமிழில் அம்புலி, விலாசம், கதம் கதம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் வேறு யாரும் இல்லை தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள தர்சனின் காதலி ஆவர். தர்சன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதும் இவர் பிக் பாஸ் செட்டிற்கு வந்திருந்தார். எனவே, மீரா மிதுன் பற்றி தர்சனுக்கும் முழு விவரம் தெரியும்.

Advertisement