ஷெரினுடன் இணைந்து தர்ஷன் போட்ட ஆட்டம். வைரலாகும் வீடியோ.

0
21713
Tharshan
- Advertisement -

கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி திருவிழா போன்று கோலாகலமாக முடிவடைந்தது பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி. இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மற்ற இரண்டு சீசன் களை விட வேற லெவல் என்று சொல்லலாம். உலகம் முழுவதும் இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கூட்டம் சேர்ந்திருந்தது. மற்ற இரண்டு சீசன்களை விட இந்த சீசனில் காதல்களுக்கும், கலவரங்களுக்கும், பிரச்சனைகளுக்கும் பஞ்சமே இல்லை. அந்த அளவுக்கு நிகழ்ச்சி சும்மா வெறித்தனமாக இருந்தது.

-விளம்பரம்-
tharshan

இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வெற்றியாளராக முகென் தேர்வானார். இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்து இருந்தார்கள். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்ட போட்டியாளர்களான தர்ஷன்,ஷெரின், சரவணன்,சாண்டி ஆகியோர் சமீபத்தில் நடன ஸ்டுடியோவில் செம்ம குத்தாட்டம் போட்டு உள்ளார்கள். சமீபத்தில் தான் தர்ஷின் காதல் பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது அனைவருக்கும் தெரிந்ததே.

- Advertisement -

பின் சனம் ஷெட்டியும், தர்சனும் பிரிந்து விட்டனர். இவர்களுடைய பிரிவிற்கு காரணம் பிக் பாஸ் வீட்டில் தர்சனும், ஷெரினும் நெருக்கமாக இருந்தது என்றும் பேசப்பட்டது. அதோடு ஷெரின் குறித்து அதிகமாக சோசியல் மீடியாவில் பேசப்பட்டது. இந்நிலையில் சாண்டி கலா மாஸ்டரின் ஸ்டுடியோவிற்கு பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்ட செரின், தர்ஷன் சித்தப்பு சரவணன் ஆகிய அனைவரும் சென்று உள்ளார்கள்.

Good morning friends

KALA Master ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಗುರುವಾರ, ಫೆಬ್ರವರಿ 27, 2020

அப்போது தனுஷ் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளிவந்த பட்டாஸ் படத்திலிருந்து ஜில் ப்ரோ என்ற பாடலுக்கு தர்ஷன், ஷெரின், சித்தப்பு சரவணன், சாண்டி, கலா மாஸ்டர் அனைவரும் ஒரு பயங்கர குத்தாட்டம் போட்டு உள்ளார்கள். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதோடு சித்தப்பு ரொம்ப நாளா ஆளையே காணோம் என்று பல பேர் புலம்பினார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு சித்தப்பு இங்க தான் இருக்கிறாரா என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement