வெளியேற்றபட்ட தர்ஷன்.! ட்ரெண்டிங்கில் வந்த விஜய் டிவிக்கு எதிரான மோசமான ஹேஷ் டேக்.!

0
22145
tharshan
- Advertisement -

விஜய் டிவி தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி.இன்னும் 10 நாட்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார்? என்று தெரிந்துவிடும். மேலும், மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி.

-விளம்பரம்-
Image

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கவின் வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில தினங்களே இருக்கும் நிலையில் கவின் பிக்பாஸ் கொடுத்த 5 லட்சத்தை பெற்றுக்கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இறுதி வாரம் என்பதால் இந்த வாரம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த முகெனை தவிர அனைவரும் நாமினேட் ஆகி இருந்தனர்.

- Advertisement -

மேலும் இந்த வாரம் நடைபெற்ற இந்த ஒட்டிங்கில் வழக்கம்போல கவின் தான் அதிக வாக்குகளை பெற்று முதலிடத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் கவின் வெளியேறி இருப்பதால் இந்த வாரம் யார் வெளியேற போகிறார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் பல்வேறு வலைதளங்களில் நடத்தப்பட்டுவரும் ஓட்டில் லாஸ்லியா தான் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தில்இருந்தார்.

அதே போல இந்த வாரம் ஷெரின் தான் வெளியேறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தர்ஷன் வெளியேறியதாக செய்திகள் வெளியாகின. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஷாக் ஆகியுள்ளனர். இதனால் சமூக வலைதளத்தில் விஜய் டிவிக்கு எதிராக #RedLightChannelVijayTV என்ற ஹேஷ் டேக் மலேசியா சிங்கப்பூர்,சென்னை என்று பல இடங்களில் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement