வனிதாவின் தலைவர் ஆசைக்கு மண்ணள்ளி போட்ட தர்ஷன்.! முகம் தொங்கிய வனிதா.!

0
5728
tharshan

பிக் பாஸ் நிகழ்ச்சி 76 நாட்களை நெருங்கியுள்ளது. இறுதிப் போட்டிக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் போட்டிகள் இன்னும் கடுமையாக மாறவில்லை. இன்னமும் பிக் பாஸ் வீட்டில் காதல் பஞ்சாயத்து தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. எனவே, வரும் வாரங்களிலாவது போட்டியாளர்களுக்கு சுவாரசியமானடாஸ்குகள் கொடுக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டை சச்சரவிற்கு சற்றும் சளைக்காத நபராக இருந்து வருகிறார் வனிதா. அதனால் தான் என்னவோ மக்கள் இவரை ஓட்டு போட்டு வெளியே அனுப்பிய பின்னரும் இவரை மீண்டும் வயல்கார்டு போட்டியாளராக பிக்பாஸ் அழைத்து வந்துள்ளார். மேலும், இவரை மீண்டும் அழைத்து வந்ததற்கு பிரயோஜனமாக பிக்பாஸ் வீட்டில் இவர் சென்ற நாள் முதலே பல்வேறு சண்டைகளையும் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறார். இதனால் அடிக்கடி கமலிடம் நோஸ்கட் வாங்கி வருகிறார்.

இதையும் பாருங்க : நேற்று வனிதாவை கமல் கலாய்த்த போதெல்லாம் கை தட்டிய நபர்.! இவங்க யாரு தெரியுமா.!

- Advertisement -

கடந்த சில வாரமாகவே வனிதாவை வச்சு செய்து வருகிறார் கமல். அதிலும் நேற்றைய நிகழ்ச்சியில் வனிதா மற்றும் வனிதா பஞ்சாயத்து கமலுக்கு கிடைத்ததால் கமலுக்கு பஞ்சாமிர்தம் கிடைத்தது போல ஆகிவிட்டது. இதனால் நேற்றைய நிகழ்ச்சியில் வனிதாவை கமல் வச்சி செய்தார்.

இது ஒரு புறம் இருக்க இந்த வாரம் முகென், லாஸ்லியா, கவின், சேரன், ஷெரின் ஆகியோர் நாமினேஷனில் இடம்பெற்றனர். மேலும், இந்த வாரம் சேரன் வெளியேற்ற பட்டதாகவும் அவர் ரகசிய அறையில் வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் பாருங்க : பிரேக்கிங் நியூஸ்: பிரபல சீரியல் நடிகர் ராஜசேகர் உடல் நலக் குறைவால் காலமானார்.!

-விளம்பரம்-

தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் வனிதாவை சிறந்த போட்டியாளராக நான்கு பேரும் சேர்ந்து தான் தேர்வு செய்தீர்களா என்று கமல் கேட்கிறார். அதற்கு சேரன் ஆம் என்று சொல்ல தர்ஷன் இல்லை என்று கையை தூக்குகிறார். உடனே கைதட்டல் பறக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement