பிக் பாஸ் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி.! நீச்சல் உடைகளில் கொடுத்த போஸ்.!

0
6183
Sanam-Shetty
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆண் போட்டியாளர்களின் சாண்டிக்கு அடுத்தபடியாக ரசிகர்களை கவர்ந்துள்ளது தர்ஷன் தான். அதிலும் இவர் வனிதாவிடம் எதிர்த்து பேசியதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயத்தை பெற்றார். இலங்கை மாடலான தர்ஷன் சில படங்களிலும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

தர்சனுக்கு ஷணம் ஷெட்டி என்ற ஒரு காதலி இருக்கிறார் அவரும் ஒரு மாடல் தான். இவர், தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூட பார்வையாளராகள் வரிசையில் அமர்ந்து கொண்டிருந்தார். பெங்களூரை பூர்வீகமாக கொண்ட சனம் ஷெட்டி, தமிழில் அம்புலி, விலாசம், கதம் கதம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : ஹாய் பாட்டி.! கிண்டலுக்குள்ளான ஸ்ருதி ஹாசன் பதிவிட்ட புகைப்படம்.! 

- Advertisement -

மேலும், இவரும் ஒரு மாடல் தான். 2016 ஆம் ஆண்டு மீரா மிதுன் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றார். இதே போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தவர் தான் ஷணம் ஷெட்டி. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீரா மிதுன் தாங்கள் வழங்கிய பட்டத்தை வைத்துக்கொண்டு மோசடி வேலைகளில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மிஸ் தென் இந்தியா அமைப்பு கூறியது.

-விளம்பரம்-

அதோடு தாங்கள் கொடுத்த பட்டத்தை இனி மீரா மிதுனால் வேறு எங்கும் பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்தது. இதனால் அந்த போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த சனம் ஷெட்டிக்கும் வழங்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சனம் ஷெட்டி தமிழில் அம்புலி படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல்வேறு படங்களில் நடித்துள்ளார் சனம் ஷெட்டி. மாடல் அழகி என்பதால் இவர் அடிக்கடி படு கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்துவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவரது கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வகித்து.

Advertisement