தர்ஷினின் காதலி யார் தெரியுமா.! அவருக்கும் மீரா மிதுனுக்கும் இருக்கும் தொடர்பு .!

By Rajkumar · 28/6/2019

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீரா மிதுன் கலந்து கொண்டதிலிருந்தே இவருக்கும் அபிராமிக்கும் தான் அடிக்கடி சண்டை முடிகொண்டே வந்தது. ஆனால், ஒரு வழியாக நேற்றைய நிகழ்ச்சியில் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்டு வந்த சண்டை முடிவிற்கு வந்தது.

நேற்றய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழக்கம் அபிராமி தன்னை நடத்தும் விதம் பற்றி பாத்திமா பாபுவிடம் புலம்பிக்கொண்டிருந்தார் மீரா மிதுன். அப்போது அபிராமி என்ட்ரி கொடுக்க 'நான் பல தமிழ் பெண்களை மாடலாக மாற்றியுள்ளேன் அதில் ஒருவர் தான் இவர்(அபிராமி ) ' என்று அபிராமி குறித்து கூறியிருந்தார் மீரா மிதுன்.

இதையும் பாருங்க : மீரா சூப்பர் மாடலா.! அவர் சொன்ன கதை உண்மையா.? சூப்பர் மாடல் என்றால் என்ன.?ஆதாரம் இதோ.! 

அதன் பின்னரே அபிராமிக்கு மீரா மிதுனுக்கும் இருக்கும் தொடர்பு வந்தது. ஆனால், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் தர்ஷனுக்கும் மீரா மிதுனுக்கும் தொடர்பு இருக்கிறது என்பது தான் பலரும் அறிந்திடாத ஒன்று. தர்ஷன் ஒரு இலங்கை மாடல் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

மேலும், இவர் தமிழில் ஒரு படத்தில் கூட நடித்துள்ளார். தர்சனுக்கு ஷணம் ஷெட்டி என்ற ஒரு காதலி இருக்கிறார் அவரும் ஒரு மாடல் தான். இவர், தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூட பார்வையாளராகள் வரிசையில் அமர்ந்து கொண்டிருந்தார். பெங்களூரை பூர்வீகமாக கொண்ட சனம் ஷெட்டி, தமிழில் அம்புலி, விலாசம், கதம் கதம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும், இவரும் ஒரு மாடல் தான். 2016 ஆம் ஆண்டு மீரா மிதுன் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றார்.

இதே போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தவர் தான் ஷணம் ஷெட்டி. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீரா மிதுன் தாங்கள் வழங்கிய பட்டத்தை வைத்துக்கொண்டு மோசடி வேலைகளில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மிஸ் தென் இந்தியா அமைப்பு கூறியது. அதோடு தாங்கள் கொடுத்த பட்டத்தை இனி மீரா மிதுனால் வேறு எங்கும் பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்தது. இதனால் அந்த போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த சனம் ஷெட்டிக்கும் வழங்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full