தர்ஷன் சொன்ன சனம் ஷெட்டியின் முன்னாள் காதலர் வேறு யாரும் இல்ல இந்த நடிகர் தான்.

0
40121
tharshan-sanam-shetty

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்ட தர்ஷன் மீது மாடல் அழகியும் நடிகையுமான சனம் ஷெட்டி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் தான் தற்போது பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலமடைந்தவர் மாடலும் நடிகருமான தர்ஷன் பிக்பாஸ் பட்டத்தை வெல்வார் என்று ரசிகர்களும் சக போட்டியாளர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் எதிர்பாராத விதமாக தர்ஷன் வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியைத் தந்தது.

Image result for kalai vendhan movie"

- Advertisement -

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன் இருந்தபோது நடிகை சனம் ஷெட்டி தான் தான் தர்ஷன் இன் காதலி என்று அடிக்கடி கூறி வந்தார். அதேபோலத் தர்ஷனுக்கு ஆதரவாக பல்வேறு வீடியோக்களையும் பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் தர்ஷன் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் தங்கள் இருவருக்கும் தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பாகவே நிச்சயதார்த்தம் கூட முடிந்துவிட்டது என்று சனம் ஷெட்டி ஆதாரங்களை வெளியிட்டார்.

இதையும் பாருங்க : இந்த படத்திலும் நானே நடிக்கிறேன். விஜய் படத்தில் நடிக்க இயக்குனரிடம் விருப்பத்தை கூறியுள்ள ஷாலினி.

-விளம்பரம்-

ஆனால், தர்ஷனோ சனம் ஷெட்டி தன்னை டார்ச்சர் செய்ததாகவும், அவருக்கு இன்னமும் அவரது பழைய காதலனுடன் தொடர்பு இருக்கிறது என்றும் கூறி இருந்தார். மேலும், சத்யா மற்றும் ரம்யா(பிக் பாஸ் ரம்யா) திருமண நிகழ்ச்சிக்கு அவள் சென்ற போது அங்கே அவளுடைய முன்னாள் காதலன் வந்திருக்கிறான். அவருடன் சேர்ந்து இரவு பார்ட்டியில் ஒன்றாக இருந்திருக்கிறார் என்று கூறி இருந்தார். தர்ஷன் சொன்ன சனம் ஷெட்டியின் முன்னாள் காதலர் வேறு யாரும் இல்லை அவரும் ஒரு நடிகர் தான்.

 kalai vendhan movie

அவருடைய பெயர் அஜய், இவர் தமிழில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘கலைவேந்தன்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சனம் ஷெட்டி தான் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரிந்து விட்டனர். அதன் பின்னர் தான் சனம் ஷெட்டி தர்ஷனை காதலித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement