தர்ஷனுக்காக சண்டை போட்ட பெண் ரசிகைகள். பஞ்சாயத்து செய்த தர்ஷன். சோகமான ரசிகை.

0
2465
tharshan
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் மிகவும் விரும்பப்பட்ட ஆண் போட்டியாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் தர்ஷன், இறுதி கட்டத்தை நெருங்கிய போது போதியவாக்குகள் இல்லாததால் திடீரென நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதால் பட்டத்தை வெல்ல முடியவில்லை. ஸ்ரீலங்காவை பூர்வீகமாக கொண்ட மாடலான தர்சன் முதல் நாள் முதல் பார்வையாளர்களைக் கவர்ந்தார். அவர் வீட்டிற்குள் அனுபவம் வாய்ந்த மற்றும்அதிகம் காட்டிய போட்டியாளர்களில் ஒருவரான வனிதா விஜயகுமாரை தைரியமாக எதிர்கொண்டபோது தர்ஷன் ரசிங்கர்களின் அதிக கவனத்தை ஈர்த்தார்.

-விளம்பரம்-

தர்ஷன் தனது அழகான தோற்றத்திற்காக இளம் பெண்கள் மத்தியில் ஒரு கனவு கண்ணனாக மாறிவிட்டார், மேலும் பிக் பாஸ் வீட்டினுள் அவரது துணிச்சலான நடத்தைக்காக குடும்ப பார்வையாளர்களை கூட ஈர்த்தார். மேலும், தர்ஷன் அதர்வாவைப் போலவே இருப்பதற்கும் அவர் கவனத்தை ஈர்த்ததற்கு ஒரு முக்கிய காரணம் என்றே சொல்லலாம். அவர் கோப்பையை வெல்லத் தவறிய போதிலும், இந்த ஆர்வமுள்ள நடிகர் பல இதயங்களை வென்றார் என்பது அவரது சமூக ஊடக கணக்குகள் மூலம் தெளிவாகிறது.

- Advertisement -

இன்ஸ்டாகிராமில் 8 லட்சத்துக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட தர்ஷன், சமூக ஊடக தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார். சமீபத்தில், தர்ஷன், தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்திற்கு ரசிகை ஒருவர் “ஹன்சாம் அண்ணா என்று பதிவிட, மற்றொரு ரசிகையோ தவறாக எதையோ பதிவிட்டு பின்னர் நீக்கி விட்டார்.இதனால் தர்ஷனை அண்ணா என்று அளித்த அந்த ரசிகை ‘அளந்து பேசுங்கள் ‘ என்று கமன்ட் செய்திருந்தார். பின்னர் இருவருமே கமெண்டில் மோதலில் ஈடுபட துவங்கிவிட்டனர்.

இதனால் ரசிகைகளின் பஞ்சாயத்து செய்த தர்ஷன், அவளை எந்த தவறும் சொல்லாதே. அவள் எந்த தவறும் செய்யவில்லை, அவள் எனக்கு ஒரு சகோதரி போன்றவள் என்று கமன்ட் செய்தார். இதனால் மற்றொரு ரசிகையோ அப்போ நான் உங்கள் சகோதரி கிடையாதா என்று அழுது புலம்பி காமண்ட செய்தார். ஆனால், அதற்கம் தர்ஷன், நீங்களும் என் சகோதரி தான் என்று காமன்ட் செய்து அந்த ரசிகையை ஆப் செய்தார். ஏற்கனவே, தர்ஷன் சனம் ஷெட்டி பஞ்சாயத்தில் அடிக்கடி சிக்கி வரும் நிலையில் தற்போது அண்ணன் தங்கை பாச பஞ்சாயத்தில் தனது ரசிகைகளிடமும் சிக்கிக்கொண்டுள்ளார் தர்ஷன்.

-விளம்பரம்-

Advertisement