gp முத்துவுக்கு பதில் இரண்டு பிரபலங்களிடம் தீவிர பேச்சு வார்த்தை – ஒருத்தர் காமெடி பீஸ், ஒருத்தர் டெரர் பீஸ்.

0
380
gpmuthu
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து விலகிய நிலையில் தற்போது அவருக்கு பதிலாக யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற மிகப்பெரிய கேள்வி நிலவிய வருகிறது. இந்த சீசனில் ஜிபி முத்து கண்டிப்பாக டாப் 5 போட்டியாளர்களில் ஜி முத்து நிட்சயம் வருவார் என்று அவரின் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் நேற்று திடீரென பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார் ஜிபி முத்து. கடந்த சில தினங்களாக ஜிபி முத்து தன் குடுமபத்தினர் நினைப்பாக இருக்கிறது அதனால் நான் வீட்டிற்கு போக வேண்டும் என்று கூறி வந்தார்.

-விளம்பரம்-

அவரை பிக் பாஸும் அழைத்து எத்தனையோ சமாதானம் செய்தார். ஆனாலும், தனக்கு தன் பிள்ளை நினைவாகவே இருக்கிறது நான் போய்தான் ஆக வேண்டும் என்று தன் முடிவில் உறுதியாக இருந்தார். இந்த நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் கூட கமல, ஜிபி முத்துவிடம் இந்த நிகழ்ச்சியால் எந்த அளவு புகழ் வரும் என்பது உங்களுக்கு தெரியும் என்று சொன்னார். ஆனால், எனக்கு புகழ் பணத்தை விட என் பிள்ளை தான் முக்கியம் என்று கூறிவிட்டு பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார். ஜிபி முத்துவின் இந்த முடிவை கண்டு கமலே ஒரு கணம் நெகிழ்ந்துபோனார்.

- Advertisement -

ஜிபி முத்து வெளியேறியதை தொடர்ந்து அவரின் வெளியேற்றம் குறித்து கமல் போட்டியாளர்களிடன் அறிவித்த போது ‘அவர் புறப்பட்டுவிட்டார். அவருக்கு இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் புகழ் மற்றும் பலன்கள் என்று எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லியும் அவருக்கு அது பெரிதாக தெரியவில்லை அதையெல்லாம் விட தன் பிள்ளை என்று சென்று விட்டார். ஒரு பலமான போட்டியாளரை வெளியில் அனுப்பி விட்டோம் என்ற சந்தோஷத்தை விட ஒரு பாசம் உள்ள தந்தையை வெளியே அனுப்பி வைத்திருக்கிறோம் என்று சந்தோஷப்படுவோம்.’ என்று கூறி இருந்தார். இந்நிலையில் அவருக்கு பதிலாக மாஸ் போட்டியாளரை களமிறக்க பிக்பாஸ் டீம் முடிவு செய்துள்ளது. அதன்படி, மன்சூர் அலிகானிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.

அவர் பிக்பாஸை ஏற்கனவே பலமுறை கடுமையாக விமர்சித்து இருப்பதால், அவரை வீட்டுக்குள் கொண்டுவந்தால் ஜிபி முத்துவை விட அதிக டிஆர்பி கிடைக்கும் என பிளான் போட்டிருக்கிறது பிக்பாஸ் டீம். அதற்கு திரைமறைவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், மன்சூர் அலிகான் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பது தான் இப்போதைக்கு தெரியவில்லை. அவர் பாசிடிவ் கமெண்ட் கொடுத்துவிட்டால் அடுத்தவாரமே உள்ளே கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-

அதே போல இன்னொரு போட்டியாளராக அடிபடுவது மதுரை முத்துவின் பெயர் தான். இந்த சீசனுக்கு முன்னரே மதுரை முத்துவின் பெயர் அடிபட்டது. மேலும், அவர் இந்த சீசனில் கலந்துகொள்ள அதிக சம்பளத்தை கேட்டதாகவும் அதை பிக் பாஸ் குழுவும் கொடுக்க சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது. ஆனால், gp முத்து கலந்துகொள்வதை அறிந்ததால் அவர் இறுதி நேரத்தில் விலகிவிட்டார் என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிந்தனர்.

இப்படி ஒரு நிலையில் ஜிபி முத்து விலகிவிட்டதால் மீண்டும் மதுரை முத்து கலந்துகொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது. பிக் பாஷை பொறுத்தவரை அடாவடி போட்டியாளர்களை போல அப்பாவி போட்டியாளர்களும் மிக முக்கியமானவர்கள் தான். அந்த வகையில் ஜிபி முத்துவை போல மதுரை முத்துவும் பலருக்கும் பரிட்சியமான ஒரு குழந்தை பீஸ் தான் என்பதால் மதுரை முத்து, ஜிபி முத்துவிற்கு நிச்சயம் ஒரு மாற்றாக இருப்பார்.

Advertisement