பிக் பாஸ் செல்கிறேனா ? பிகில் பட நடிகை இந்திரஜா வெளியிட்ட வீடியோ.

0
1565
indraja
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 5 வது வாரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் கொஞ்சம் சலிப்பாக சென்று கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடித்து வருகிறது. எதிர்பாராத பல போட்டியாளர்கள் தங்களது வேறு ஒரு பக்கத்தைக் காட்டி சக போட்டியாளர்களையும் பார்வையாளர்களையும் கொஞ்சம் மிரள வைத்து செய்துவருகிறார்கள். இருப்பினும் கடந்த சில வாரமாக வெறும் சண்டை சச்சரவு ஆகவே பிக்பாஸ் வீடு சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

இதுவரை ரேகா மற்றும் வேல்முருகன் என்று இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி இருக்கும் நிலையில் அர்ச்சனா மற்றும் சுசித்ரா என்று இரண்டு வைல்டு கார்டு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டில் நுழைந்தார்கள். அர்ச்சனா உள்ளே நுழைந்து கொஞ்சம் குரூப்பீசம் பஞ்சாயத்து ஓடியது. அதன் பின்னர் இரண்டாம் வைல்டு கார்டு போட்டியாளரான சுசித்ரா வந்த ஒரு சில நாட்களிலேயே போட்டியாளராகளிடையே இருக்கும் குரூப்பீசம் பஞ்சாயத்து மேலும் தலை தூக்கியுள்ளது. இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் வீட்டில் மூன்றாம் வைல்டு கார்டு போட்டியாளர் நுழைய இருக்கிறார் என்ற தகவல் வெளியானது.

- Advertisement -

அதுவும் பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கர் மகளும் பிகில் பட நடிகையுமான இந்ரஜா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல உள்ளதாக செய்திகள் வெளியாகின. அதற்கு ஏற்றார் போல சமீபத்தில் இந்தரஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட சில புகைடபங்களில் அவர் ஹோட்டலில் இருப்பது போல இருக்கிறது என்றும் எனவே, அவரும் மற்ற போட்டியாளர்களை போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பாக தனிமைபடுத்தபட்டுள்ளார் என்று கூறப்பட்டது.

இப்படி ஒரு நிலையில் இந்த சர்ச்சைக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்திரஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து கூறியுள்ள அவர், எனவே இந்தரஜா பிக் பாஸ் செல்லவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement