புதிய கேப்டனால் பறிபோன கிட்சன் பதவி – கேப்டன் ஆனதும் அதிரடி காட்டிய போட்டியாளர். கைதட்டி குதித்த தனலட்சுமி.

0
458
captain
- Advertisement -

கேப்டன் ஆன முதல் நாளிலேயே அசீம் செய்திருக்கும் செயலை குறித்து பலரும் பாராட்டி வரும் பதிவு சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி 48 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருந்தார். இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 6 போட்டியாளர்கள் போக தற்போது 15 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

மேலும், இந்த நிகழ்ச்சியின் விறுவிறுப்பை தக்கவைத்து கொள்ள பிக் பாஸும் போட்டியாளர்களுக்கு பலவிதமான டாஸ்குகளை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் கோர்ட் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் சிறப்பாக விளையாடியிருந்தார்கள். பின் வார இறுதியில் சிறப்பாக விளையாடிய போட்டியாளர்கள் யார்? என்று பிக் பாஸ் கேட்டது.

அதற்கு போட்டியாளர்கள் பலருமே அசீம் , சிவின், விக்ரமனை தேர்வு செய்திருந்தார்கள். அதேபோல் நேற்று ராபர்ட் மாஸ்டர் குறைந்த வாக்குகளை பெற்று நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். மேலும், வழக்கம் போல் இந்த வார கேப்டன் காண போட்டி நடந்தது. அசீம் , சிவின், விக்ரமன் ஆகிய இவர்கள் மூவருக்குள் நடைபெற்றது. அதில் அசீம் கேப்டன் பதவியை வென்றார். பலரும் பாராட்டி இருந்தார்கள்.

-விளம்பரம்-

அசீம் கேப்டன் ஆன உடனே கிச்சன் டீமை தான் மாற்றி இருக்கிறார். ஏனென்றால், கடந்த வாரமே கிச்சன் டீமில் இருக்கும் ரக்ஷிதா எந்த வாரமும் ஒர்ஸ்ட் பர்பாமன்ஸில் வருவதில்லை. அவர்கள் சேப்பாக தப்பித்து விடுகிறார்கள் என்றெல்லாம் குற்றச்சாட்டு வைத்திருந்தார்கள். மைனா கூட கடந்த வாரம் இது குறித்து கேட்டதற்கு ரக்ஷிதாவை மாற்றாமல் இருந்தார்.

ரக்ஷிதா எல்லா வாரமுமே நல்ல வேலை செய்கிறார் என்று பெயர் எடுத்து விட்டு தப்பித்து விடுகிறார். அதனால் மாற்ற வேண்டும். மற்றவர்களும் பிற வேலைகளை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்கள். அதன் அடிப்படையில் அசீம் கிச்சன் டீமில் இருந்த ரக்ஷிதாவை தூக்கி வேறொரு டீமில் போட்டுவிட்டார். தற்போது அது தொடர்பான வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பலரும் அசீமை பாராட்டி வருகின்றனர்.

Advertisement