லீக்கான Ticket To Finale 3ஆம் சுற்று முடிவு – முன்னிலையில் யார் இருக்கா பாருங்க.

0
3134
BB
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 12 வாரங்களை கடந்து 13 வது வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா ஆகிய என்று 9 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஆஜீத் வெளியேற்றப்பட்டார். இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில நாட்கள் தான் எஞ்சி இருக்கிறது.

-விளம்பரம்-

தற்போது ஆரி, சோம், பாலாஜி, ரியோ, ரம்யா, கேப்ரில்லா, ஷிவானி ஆகிய 7 பேர் மட்டும் மீதமிருக்கின்றனர். இதில் பாலாஜிக்கு ஒரு சிறப்பு பவர் கடந்த வாரம் கொடுக்கப்பட்டது. ஆனால், அது என்னவென்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதே போல இதுவரை துவங்கங்கப்படாமல் இருந்த கோல்டன் டிக்கெட் டாஸ்க் நேற்று தான் துவங்கியது. நேற்றய நிகழ்ச்சியில் Ticket To Finale கான இரண்டு டாஸ்குகள் மட்டும் நிறைவடைந்தது.

- Advertisement -

நேற்றைய முதல் டாஸ்க்கில் பாலாஜி முதலிடத்தையும் சிவானி இறுதி இடத்தையும் பிடித்திருந்தார்கள். அதேபோல இரண்டாம் டாக்கில் ரம்யா பாண்டியன் முதலிடத்தையும் கேப்ரில்லா கடைசி இடத்தையும் பிடித்து இருந்தார்கள். நேற்று முடிவடைந்த இந்த இரண்டு டாஸ்கின் அடிப்படையில் 12 புள்ளிகளுடன் ரியோ முதல் இடத்தை பிடித்திருந்தார். இப்படி ஒரு நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிறது. இதில் மூன்றாம் டாஸ்க் முடிவில் பாலாஜி முதலிடத்தையும் ரியோ கடைசி இடத்தையும் பிடித்து இருக்கிறார்கள் என்பது சமீபத்தில் வெளியான வீடியோ மூலம் தெரியவந்தது.

அதே போல Ticket To Finale கான மூன்று டாஸ்க்குகள் முடிவில் 16 புள்ளிகள் பெற்று பாலாஜி தான் முன்னிலையில் இருந்து வருகிறார் இதில் கேப்ரில்லா வெறும் ஐந்து புள்ளிகளை பெற்று கடைசி இடத்தில் இருக்கிறார். இன்னும் ஒரு டாஸ்க் மட்டுமே இருக்கின்ற நிலையில் இந்த வாரம் பணப்பெட்டி சலுகை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை யார் பெற்றுக்கொண்டு வெளியேறுவார்கள் என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

-விளம்பரம்-
Advertisement