எதிர்பாராத திருப்பம்..! “Ticket To Finale” வென்றது இவர்தான் அதிகாரப்பூர்வ தகவல்.!

0
724
janani
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவருக்கும் டிக்கெட் டு பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் தண்ணீர் நிறைந்த ஒரு கண்ணாடி பௌலில் கையில் ஏந்திக் கொண்டு ஒரு வட்ட மேடையில் நடந்து வர வேண்டும். ஒவ்வொரு முறை பஸ்ஸர் ஒளித்தவுடன் யாரது பௌலில் தண்ணீர் குறைவாக இருக்கிறதோ அவரகள் போட்டியில் இருந்து வெளியேற்ற படுவார் என்பது தான் டாஸ்க்.

-விளம்பரம்-

Bigg-boss-task

- Advertisement -

இந்த டாஸ்க் தொடுங்குவதற்கு முன்பாகவே ஜனனி ஐயர் தான் டாஸ்கில் வெற்றி பெற்று பைனலுக்கு நேரடியாக செல்லும் கோல்டன் டிக்கெட்டை பெற்றதாக நேற்றே சில செய்திகள் சமூக வளைத்தளத்தில் படு வைரலாக பரவி வந்தது. நேற்றைய நிகழ்ச்சியில் இந்த டாஸ்கில் இருந்து பாலாஜி, ஐஸ்வர்யா, ரித்விகா ஆகியோர் வெளியேறி விட்டனர் .

இன்று வெளியான ப்ரோமோ வீடியோவில் பார்க்கும் போது ஜனனி ஐயர் மற்றும் யாஷிகா தான் இறுதி வரை நின்று கொண்டிருக்கின்றனர். அதில் ஜனனி வைத்திருந்த பவுலில் தான் தண்ணீர் மிகவும் கம்மியாகவும், யாஷிகா பௌலில் அதிமாக தண்ணீர் இருக்கின்றது. எனவே, யாஷிகா தான் வெற்றி பெற்றுள்ளாரோ என்று தோன்றுகிறது.

-விளம்பரம்-

janani

ஆனால், தற்போது வந்த தகவலின்படி ஜனனி தான் இந்த டாஸ்கில் வெற்றி பெற்று கோல்டன் டிக்கெட்டை வென்று நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. அதே போல நேற்று வரை ஜனனி தான் டிக்கெட் டு பினாலே டாஸ்கில் வெற்றி பெற்றார் என்று சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியாகியது,

அதே போல ஐஸ்வர்யாவின் ட்விட்டர் பக்கத்தில் கூட ஜனனி தான் டிக்கெட் டு பினாலே டாஸ்கை வென்றதாகவும், இந்த வாரம் ரித்விகா வெளியேறியதாகவும் ஏற்கனவே தகவல் ஒன்றும் வெளியாகி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை டாஸ்கின் போது தவறி தண்ணீர் சிந்தி இருந்திருக்கலாம் இல்லைஎன்றால் யாஷிகா எதாவது விதி மீறி இருக்கலாம் இதனால் ஜனனி இன்று வெற்றி பெறுவதர்க்கான வாய்ப்பு வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

yashika

அதே போல இன்று வெளியான டாஸ்கின் இறுதியில் ஜனனி தான் மிகவும் சந்தோசமாக உள்ளார். ஒருவேளை யாஷிகா வெற்றி பெற்றிருந்தால் கண்டிப்பாக அந்த இடத்தில ஐஸ்வர்யா இருந்திருப்பார். ஆனால், அந்த ப்ரோமோவில் யாஷிகாவின் அருகில் ஐஸ்வர்யா இல்லை. இந்நிலையில் கோல்டன் டிக்கெட்டை ஜனனி தான் வெற்றி பெற்றுள்ளார் என்று நம்பகரமான வட்டாரத்தில் இருந்து தகவலகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

Advertisement