பிக் பாஸ் நேர மாற்றத்தால் நிறுத்தப்பட்ட விஜய் டிவியின் முக்கிய சீரியல் – ரசிகர்கள் ஷாக்.

0
1848
kamal
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் புதிதாக துவங்கப்பட்டுள்ள பாவம் கணேசன் என்ற சீரியலால் பல்வேறு சீரியலில் ஒளிபரப்பு நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் நிறுத்தப்பட்டு இருக்கிறது. விஜய் தொலைக்காட்சிகளில் பல சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அதிலும் ராஜா ராணி, ஈரமான ரோஜாவே, சின்னத் தம்பி என்று சினிமா பட பாணியில் டைட்டில்களை வைத்து வெளியான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி போன்ற தொடர்கள் பார்ட் 1,2,3 என்று ஒளிபரப்பப்பட்டது.

-விளம்பரம்-
Raja Rani (TV series) - Wikipedia

அந்த வரிசையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் இரண்டாம் பாகம் கூட துவங்கப்பட்டுள்ளது.இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெற தவறி வருகிறது.இதனால் இந்த சீரியலில் எக்கச்சக்க மாற்றங்களை செய்து வருகிறது தொலைக்காட்சி குழு தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் விஜய் டிவியின் டிஆர்பியை ஓரளவிற்கு இழுத்து பிடித்துக் கொண்டு வருகிறது இந்த நிகழ்ச்சியும் இன்னும் ஒருசில தினங்களில் நிறைவடைய இருக்கிறது இப்படி ஒரு நிலையில் நேற்று முதல் ராஜா ராணி தொடர் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிவரும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக துவங்கி இருக்கிறது.

- Advertisement -

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணமே விஜய் தொலைக்காட்சியில் நாளை முதல் துவங்க இருக்கும் ‘பாவம் கணேசா’ என்ற என்ற புதிய சீரியல் தான் காரணம். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்ப துவங்கி இருப்பதால் இதுநாள் வரை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ‘தேன்மொழி’ சீரியலின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

விஜய் டிவியின் பிரபல தொடர்களில் ஒன்று தேன்மொழி.விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளியான ஜாக்குலின் இந்த தொடரின் நாயகியாக நடித்து வருகிறார்.சித்தார்த் இந்த தொடரின் நாயகியாக அசத்தி வருகிறார்.இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியால் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த தேன்மொழி தொடர் பிக்பாஸ் தொடர் முடிவடையும் வரை 2 வாரங்களுக்கு நிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement