மீண்டும் பணப்பெட்டி டாஸ்க், 25 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேற முன்வந்த போட்டியாளர். இறுதியில் சிம்பு கொடுத்த ஷாக்.

0
325
biggboss
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் இருந்து 25 லட்சத்தை எடுத்து செல்லும் போட்டியாளர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழில் புது வித்தியாசமான முயற்சியில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய நிகழ்ச்சி தான் பிக் பாஸ் அல்டிமேட். இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஓடிடியில் ஒளிபரப்பானது. இதே பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி எட்டாவது வாரத்தை கடந்து இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டு உள்ளது. இதனால் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பயங்கரமாக விளையாடி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்குள் வன்மம், பொறாமை தொடங்கி விட்டது. அதோடு இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே பல சர்ச்சைகள் எழுந்து கொண்டு இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை சுஜா வருணி, ஷாரிக், அபிநய், தாடி பாலாஜி, சினேகன், அனிதா வெளியேறிய நிலையில் வனிதா தாமாகவே வெளியேறினார்.

- Advertisement -

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி:

ஏற்கனவே வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் Kpy சதிஷ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்தனர். அதே போல விக்ரம் பட ஷூட்டிங்கால் கமல் நிகழ்ச்சியில் இருந்து விலகியதை தொடர்ந்து சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதில் இருந்து நிகழ்ச்சியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பின் மீண்டும் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக ரம்யா பாண்டியன் வந்தார். கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனின் சதீஸ் வெளியேறினார்.

சுரேஷ் தாத்தா வெளியேறிய காரணம்:

அதுமட்டும் இல்லாமல் திடீரென்று நிகழ்ச்சியிலிருந்து சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சுரேஷ் தாத்தா உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் சாண்டி மற்றும் தீனா ஆகியோர் என்ட்ரி ஆகி இருந்தார்கள். பின் இவர்கள் வெளியேறி விட்டார்கள். தற்போது டாஸ்குகளும் கடுமையாக இருக்கிறது.

-விளம்பரம்-

சிம்பு அறிவித்த அறிவிப்பு:

இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஒரு குறிப்பிட்ட பண தொகைக்காக டாஸ்க் வைக்கப்பட்டது. அதில் ஜூலி, ஸ்ருதி ஆகிய இருவரும் விளையாடி இருந்தார்கள். இறுதியில் வெற்றி பெற்ற சுருதி 15 லட்சத்துடன் வெளியேறி இருக்கிறார். இவரது முடிவை ரசிகர்கள் பாராட்டி இருந்தார்கள். ஆனால், தற்போது நிகழ்ச்சியில் சிம்பு இந்த இந்த பெட்டியை இவ்வளவு சீக்கிரம் யாரும் எடுத்துக் கொண்டு போக முடியாது என்று கூறினார். பின் இதை விட வேறு ஒரு பெட்டியை எடுத்து கொண்டு வேறு ஒருவர் எடுத்து வெளியேற வேண்டும்.

ஜூலி எடுக்க நினைத்த பண மதிப்பு:

அதன் மதிப்பு 25 லட்சம் ரூபாய் என்று கூறியிருந்தார். இதை கேட்டு போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள். இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் 25 லட்சத்தை எடுத்துக்கொண்டு யார் வெளியே போகிறீர்கள் என்று கேட்டவுடன் ஜூலி நான் போகிறேன் என்று கூறி இருக்கிறார். மேலும், ஜூலி 25 லட்சத்துடன் வெளியேறிவிடலாம் என்று ஆசையாக இருந்தார். ஆனால், இறுதியில் இது சும்மா prank thaan என்று சிம்பு அறிவித்து விட்டார். தற்போது இந்த நிகழ்ச்சி ப்ரோமோ வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement