BB அல்டிமேட்டின் 4வது போட்டியாளர் – மணிமேகலை கொடுத்த 3 Clue. இத வச்சி யாருன்னு சொல்லுங்க பாப்போம்.

0
529
manimegalai
- Advertisement -

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அடுத்த போட்டியாளர்க்கான ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகும் மிகப்பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இது தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் ஐந்து வருடங்களாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. கமலஹாசன் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கப்பட்டது. சமீபத்தில் தான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நிறைவடைந்தது.

-விளம்பரம்-

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி:

இதில் முதல் இடத்தை ராஜுவும், இரண்டாம் இடத்தை பிரியங்கா பிடித்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து ரசிகர்கள் சோகத்தில் இருந்த சமயத்தில் தான் ஒரு புது வகையான பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் டிவி அறிவித்து உள்ளது. அதாவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் வேறு இந்த பிக் பாஸ் வேறு. பிக் பாஸ் வீட்டை 24 மணி நேரமும் பார்க்க முடியும். இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. தற்போது இதே கான்சப்டில் இந்த நிகழ்ச்சியை தமிழிலும் தொடங்க இருக்கிறார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி:

தமிழில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இந்த நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இதில் தமிழ் பிக் பாஸில் 1 முதல் 5 சீசன் வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். மேலும், இந்த நிகழ்ச்சிக்கு பிக் பாஸ் அல்டிமேட் என்று பெயர் வைத்து உள்ளார்கள். இதில் ஐந்து சீசன்களிலும் வெற்றி பெற்ற நபர்கள் கலந்து கொள்ள கூடாது. இந்த நிகழ்ச்சி வரும் ஜனவரி 30 ஆம் தேதி 6. 30 30 துவங்க இருக்கிறது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பெயர்கள் சமூக வலைதளத்தில் அடிபட்டு வருகிறது.

அடுத்த போட்டியாளர் ப்ரோமோ:

இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளாராக சினேகன்,ஜூலை, வனிதா ஆகியோர் உறுதியாகி இருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அடுத்த போட்டியாளர் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், மணிமேகலை அடுத்த போட்டியாளர் குறித்த குழு கொடுக்கிறார். அதில் அவர் முதலில் கரண்டி எடுத்து காண்பிக்கிறார். இரண்டாவது துண்டு, மூன்றாவது தீப்பட்டி எடுத்து காண்பிக்கிறார்.

-விளம்பரம்-

சுரேஷ் சக்ரவர்த்தி என்று ரசிகர்களின் டீவ்ட்:

இப்படி மூன்று Clueவை வைத்து யார் அவர்கள் என்று கேட்டிருக்கிறார். தற்போது இந்த ப்ரோமோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் ‘சுரேஷ் சக்ரவர்த்தி’ என்று கமென்ட் போட்டு வருகிறார்கள். அவர் தான் அதிகம் சமைப்பார், துண்டை அதிகம் கழுத்தில் போட்டுக் கொண்டு இருப்பார் என்று பல பேர் கமென்ட் போட்டு வருகிறார்கள். உண்மையிலேயே சுரேஷ் சக்ரவர்த்தியா? இல்லையா? என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

Advertisement