தன் ஜட்ஜையே நாமினேட் செய்த சதிஷ், பேசி வைத்து நாமினேட் செய்த ஜூலி மற்றும் அபிராமி – இந்த வார நாமினேஷன் லிஸ்ட் இதோ.

0
473
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நான்காம் வாரத்தை கடந்து உள்ளது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பயங்கரமாக விளையாடி வருகிறார்கள். தமிழில் புது வித்தியாசமான முயற்சியில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய நிகழ்ச்சி தான் பிக் பாஸ் அல்டிமேட். இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ottயில் ஒளிபரப்பானது. இதே கான்சப்டில் தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-

கடந்த 2 சீசன்களை போல போட்டியாளர்கள் அனைவரும் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன் போட்டியாளர்கள் இரண்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு தனிமைப்படத்தப்பட்ட பின்னரே பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த நிகழ்ச்சியில் வனிதா, சினேகன், அபிராமி, சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், சுரேஷ் ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர். மேலும், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே போட்டியாளர்களுக்குள் வன்மம் கலவரம் தொடங்கி பயங்கரமாக ஒருவரை ஒருவர் தாக்கி விளையாடி வருகிறார்கள்.

- Advertisement -

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர்கள்:

மேலும், நிகழ்ச்சியில் இருந்து முதலில் சுரேஷ் சக்ரவர்த்தி எலிமினேட் ஆகி இருக்கிறார். அதனை தொடர்ந்து இரண்டாம் வாரத்திற்கான எவிக்ஷனில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் சுஜா வருணி வெளியேறி இருந்தார். இதனை தொடர்ந்து மூன்றாவது வாரம் அபிநய் மற்றும் ஷாரிக் வெளியேறி இருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் மூன்றாம் வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து கமலஹாசன் பட சூட்டிங் நேரம் ஒதுக்க முடியாத காரணத்தினால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இது குறித்து கமல்ஹாசன் அறிக்கை கூட வெளியிட்டிருந்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிம்பு:

இதனால் ரசிகர்களும் போட்டியாளர்களும் பெரும் அப்சட் அடைந்து இருந்தார்கள். அதோடு கமல் வெளியேறியதை தொடர்ந்து வனிதாவும், தான் நிகழ்ச்சியில் தொடர விரும்பவில்லை என்று கூறி நிகழ்ச்சியில் வெளியேறினார். இந்த நிலையில் தான் BB அல்டிமேட்டின் தொகுப்பாளராக சிம்பு களமிறங்கி இருக்கிறார். அதேபோல் இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக சதீஸ் நுழைந்து இருக்கிறார். மேலும், கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் கேப்டன் தாமரை மற்றும் வார ட்ரெண்டிங் பிளேயர் பாலாஜி முருகதாஸை தவிர மீதமுள்ள 8 பெரும் நாமினேட் ஆகி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

கடந்த வாரம் எவிக்ஷன்:

ஆனால், கடந்த வாரம் வனிதா தாமாகவே வெளியேறிவிட்டதால் கடந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று கூறப்பட்டது. ஆனால், கடந்த வாரம் குறைந்த வாக்குகளை வாங்கிய தாடி பாலாஜி தான் வெளியேற வேண்டியது. வனிதா சென்றதால் எலிமினேஷனில் இருந்து தாடி பாலாஜி தப்பித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் ஐந்தாம் வாரம் எவிக்சன் நடந்துள்ளது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் இரண்டு பேரை நாமினேட் செய்திருக்கிறார்கள். அந்த பட்டியல் இதோ,

தாமரை – சினேகன், தாடி பாலாஜி, அனிதா
சினேகன் – தாமரை, சுருதி, அனிதா
சுருதி – அபிராமி, தாடி பாலாஜி, ஜூலி
நிரூப் – ஜூலி, அபிராமி, தாடி பாலாஜி
அனிதா – தாடி பாலாஜி, அபிராமி, ஜூலி
அபிராமி – அனிதா, சுருதி, நிரூப்
தாடி பாலாஜி – தாமரை, அனிதா, சுருதி
சுரேஷ் – தாடி பாலாஜி, சினேகன், சுருதி
ஜூலி – சுருதி, அனிதா, நிரூப்
சதிஷ் – தாமரை, தாடி பாலாஜி, ஜூலி
பாலாஜி – அனிதா, சுருத, சினேகன்

இந்த வாரம் நாமினேட் ஆன நபர்கள் :

மேலும், இந்த வார டிரெண்டிங் பிளேயர் யாரும் இல்லை. இந்த வார கேப்டன் பாலாஜி முருகதாஸ் தவிர இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் தாடி பாலாஜி, சுருதி, அனிதா, ஜூலி, அபிராமி, சினேகன், தாமரை. இதில் இருந்து இந்த வாரம் யார் வெளியே போகிறார்கள்? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். அடுத்து யார் வெளியில் போக போறாங்க என்று உங்களுக்கு தெரிந்தால் கீழே கமெண்டில் சொல்லுங்கள்.

Advertisement