Bigg Boss Tamil : நிரூப்பிற்கு முத்தம் கொடுத்த அபிராமி, மீண்டும் காதல் பத்திக்குமோ ? வைரலாகும் வீடியோ.

0
324
niroop
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நான்காம் வாரத்தை தொடங்கி உள்ளது . தமிழில் இந்த நிகழ்ச்சி டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் வனிதா, சினேகன், அபிராமி, சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், சுருதி, தாமரை, சுரேஷ் ஷாரிக், நிரூப் ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர். பின் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே போட்டியாளர்களுக்குள் வன்மம் கலவரம் தொடங்கி பயங்கரமாக ஒருவரை ஒருவர் தாக்கி விளையாடி வருகிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், முதலில் சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேட் ஆகி இருக்கிறார். அதனை தொடர்ந்து இரண்டாம் வாரத்திற்கான எவிக்ஷனில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் சுஜா வருணி வெளியேறி இருந்தார். அதை தொடர்ந்து இந்த மூன்றாவது வாரம் அபிநய் மற்றும் ஷாரிக் வெளியேறி இருந்தார்கள். அதோடு கடந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து கமலஹாசன் பட சூட்டிங் நேரம் ஒதுக்க முடியாத காரணத்தினால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இது குறித்து கமல்ஹாசன் அறிக்கை கூட வெளியிட்டிருந்தார்.

- Advertisement -

நிகழ்ச்சியில் எலிமினேட் ஆனவர்கள்:

இதனால் ரசிகர்களும் போட்டியாளர்களும் பெரும் அப்சட் அடைந்து உள்ளனர். பின்னர் கமல் வெளியேறியதை தொடர்ந்து வனிதாவும் தான் இந்த நிகழ்ச்சியில் தொடர விரும்பவில்லை என்று கூறி வெளியேறினார். தற்போது BB அல்டிமேட்டின் தொகுப்பாளராக சிம்பு வந்து இருக்கிறார். அதேபோல் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் இந்த வார கேப்டன் தாமரை மற்றும் இந்த வார ட்ரெண்டிங் பிளேயர் பாலாஜி முருகதாஸை தவிர மீதமுள்ள 8 பெரும் நாமினேட் ஆகி இருக்கின்றனர்.

angel மற்றும் demon டாஸ்க்:

இப்படி இருக்கும் நிலையில் இந்த நான்காவது வாரம் தொடக்கத்தில் ஏஞ்சல் மற்றும் demon என்ற டாஸ்க் கொடுத்திருக்கிறார்கள். இதில் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து ஓரணி ஏஞ்சல்ஸ் ஆகவும் மற்றொரு demon ஆகவும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அபிராமி, நிரூப்க்கு முத்தம் கொடுத்த காட்சி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. உண்மையாக நடந்தது என்னவென்றால், ஏஞ்சல் மற்றும் demon என்ற டாக்கில் தாமரையிடம் அபிராமி மற்றும் நிரூப் இருவரும் சிக்கிக் கொள்கிறார்கள்.

-விளம்பரம்-

தாமரை செய்த வேலை:

அதில் நிரூப் மற்றும் அபிராமிக்கு பல்வேறு டாஸ்குகளை தாமரை கொடுக்கிறார். அப்போது திடீரென்று தாமரை நிரூப்பிற்கு அபிராமி முத்தம் கொடு என்று சொல்கிறார். இருவருமே முதன் முதலில் முடியாது என்று மறுக்கிறார்கள். பின் தாமரை ஒரு குழந்தை முத்தம் கொடுத்தால் நீ வாங்கிக் கொள்ள மாட்டாயா என்று நிரூப்பிடம் சொல்கிறார். அதற்கு நிரூப் சரி என்று சொல்கிறார். அபிராமியிடம், நீ ஒரு குழந்தை மாதிரி தான் இருக்கிறாய். குழந்தையாக நினைத்து கொடு என்று சொல்கிறார். அபிராமியும் தயங்கி தயங்கி தான் நிரூப்க்கு முத்தம் கொடுக்கிறார்.

நிரூப்க்கு அபிராமி கொடுத்த முத்தம்:

இப்படி அபிராமி, நிரூப்க்கு முத்தம் கொடுத்த காட்சி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்ததும் ரசிகர்கள் பலரும், தாமரை உனக்கு இது தேவையில்லாத வேலை? என்று விமர்சித்து வருகிறார்கள். சிலர் பழைய காதல், பழைய நினைவுகள் இனிமே பிக்பாஸ் வீட்டில் காதல் ஜோடி தான் என்றெல்லாம் கிண்டல் செய்கிறார்கள். தற்போது சோசியல் மீடியா முழுவதும் அபிராமி-நிரூப் முத்தம் காட்சி தான் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அபிராமி, நிரூப்பின் முன்னாள் காதலி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

அபிராமி- நிரூப் காதல்:

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே அபிராமி- நிரூப் குறித்த மீம்ஸ்களும், இவர்களுடைய பிரேக்கப் குறித்த சர்ச்சைகளும் தான் அதிகமாக போகிறது. நிகழ்ச்சியில் நடந்த செலிபிரிட்டி vs பிரஸ் மீட் என்ற டாஸ்க்கில் இதற்கு விளக்கம் கொடுத்து இருவரும் நல்ல நண்பர்கள் தான் என்று பேசி இருந்தார்கள். தற்போது இந்த முத்த காட்சி மூலம் இவர்கள் காதல் மீண்டும் மலருமா? இல்லையா? என்பதை இனிவரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

Advertisement