‘Condom’ பற்றி கேட்டதால் கடுப்பான வனிதா, பிக் பாஸ் வீட்டில் வெடித்த வாக்கு வாதம். உண்மையில் இந்த கேள்விக்கு காரணம் யார் தெரியுமா? வீடியோ இதோ.

0
682
vanitha
- Advertisement -

அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை கோலாகலமாக துவங்கியது. ஒரு புது வித பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் டிவி அறிமுகப்படுத்தி உள்ளது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் வேறு. இந்த பிக் பாஸ் வேறு. மேலும், இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. தற்போது இதே கான்சப்டில் இந்த நிகழ்ச்சியை தமிழிலும் தொடங்கி டிஸ்னி ஹாட் ஸ்டாரில் தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இதில் வனிதா, சினேகன், சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், ஜூலி, தாமரை சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 14 பேர் கலந்துகொண்டனர். இந்நிலையில் முதல் நாளே பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரிடமும் வனிதா சண்டை போட்டு இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் வீட்டில் முதல் நாளன்று இரண்டாவது டாஸ்க்கை பிக் பாஸ் ஹவுஸ் மேட்டுக்கு கொடுத்திருக்கிறார். அதில் ஒவ்வொரு போட்டியாளரும் பிக் பாஸ் கொடுத்த கேள்வியை கேட்பார்கள். அதில் கேள்வி கேட்கும்போது ஆமாம் என்றால் பாகற்காய் ஜூஸ் குடிக்கணும், இல்லை என்றால் சிப்சை கடிக்கணும்.

- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் குடிக்கணும் – கடிக்கணும் டாஸ்க்:

குடிக்கணும் – கடிக்கணும் இது தான் இரண்டாவது. இதில் நிறைய கேள்விகள் எல்லாம்இருந்தது. எல்லோருமே கேள்விக்கு ஏற்ற மாதிரி பதில் சொல்லிட்டு வந்தார்கள். ஆனால், வனிதா மட்டுமே சம்பந்தமே இல்லாத மாதிரி விளையாடி இருந்தார். பின் கேட்கும் கேள்விகள் எல்லாத்துக்கும் மாத்தி மாத்தி பதில் சொல்லி சிப்சை மட்டும் சாப்பிட்டு இருந்தார். அப்போது தாடி பாலாஜிக்கு கேள்வி வந்தது. ஆனால், பாலாஜி படிக்க மாட்டேன் என்று சொன்னார். உடனே எல்லோரும் சேர்ந்து அந்தக் கேள்வியை படித்தார்கள். அப்படி என்ன கேள்வி என்றால், இதுவரை காண்டமை பலூன் மாறி ஊதி இருக்கீங்களா? என்று கேட்டார்கள். உடனே வனிதா இந்த மாதிரி கேள்வி எல்லாம் எனக்கு பிடிக்காது.

டாஸ்க்கை விளையாடமாட்டேன் என்று சொன்ன வனிதா:

இதுக்கு தான் இந்த விளையாட்டில் நான் வரமாட்டேன் என்று சொன்னேன். குழந்தைகளெல்லாம் பார்க்கிறார்கள். ஏன் இப்படியெல்லாம் பண்ணுகிறீர்கள். இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று வனிதா சொன்னார். உடனே சுரேஷ் இதை குழந்தைகள் பார்ப்பதில்லை என்று சொன்னார். பின் நிரூப், இதை ஏன் தப்பாக பார்க்கிறீர்கள்? இது தடை செய்யப்பட்ட டாபிக் கிடையாது. சும்மா ஒரு விளையாட்டுதான் என்று சொல்கிறார். உடனே வனிதா இது என்னுடைய ஒப்பினியன் என்று சொல்கிறார். பின் பாலாஜி பொங்கி எழுந்து உங்களுடைய ஒப்பினியன் நான் கேட்கும் போது எங்களுடையதையும் நீங்கள் கேட்கவேண்டும் என்று சொல்கிறார்.

-விளம்பரம்-

பிற போட்டியாளர்களுடன் சண்டை போடும் வனிதா:

ஆனால், வனிதா நான் கேட்டக மாட்டேன். யார் தவறு செய்தாலும் நான் சொல்லுவேன் என்று வீட்டில் எல்லா போட்டியாளர்களுடன் வனிதா சண்டை போட்டார். பின் கேமை விட்டு வனிதா வெளியேறிவிட்டார். பின் பிற போட்டியாளர்கள் விளையாட்டை தொடங்கினார்கள். அப்போது அபிராமி கேள்வி கேட்கும் போது என்ன கேள்வி? என்று வனிதா மீண்டும் உள்ளே வந்தார். உடனே சாரிக் கோபமாக நீங்க கேமே விட்டு வெளியே போய் விட்டீர்கள். எதற்கு உள்ளே வருகிறீர்கள் என்று கேட்கிறார். இதை சொல்ல நீ யாரு? என்னுடைய விருப்பம் வருவேன் போவேன்.

உச்சகட்ட கோபத்தில் பிற போட்டியாளர்கள்:

யாரும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று வனிதா சொல்கிறார். உடனே பாலாஜி நீங்களும் ஒரு அவுட் மேல் தான். இங்க ஒன்னும் ஓனர் கிடையாது. என்று கோபப்பட்டு பேசுகிறார்கள். இப்படி உள்ளே வந்த முதல் நாளே வீட்டில் உள்ள அனைவரிடமும் வனிதா சண்டை போட்டு இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பிக்பாஸ் பிக்பாஸ் ரசிகர்கள் எல்லோரும் வனிதா வந்த வேலையை சரியாக செய்து கொண்டிருக்கின்றார் என்றும் முதல் வாரத்திலேயே வனிதா வெளியே செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றும் கூறி வருகிறார்கள்.இந்த ஒரு கேள்வி மட்டுமல்ல அந்த சீட்டில் பல சர்ச்சையான கேள்விகள் இருந்தது. ஆனால், உண்மையில் இப்படி ஒரு கேள்வியை கேட்டது ஷாரிக் கிடையாது. அந்த சீட்டில் இருந்த அணைத்து கேள்விகளையும் எழுதி வைத்தது பிக் பாஸ் குழு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement