நான்காம் வார நாமினேஷன் – யார், யாரை நாமினேட் செய்தனர் முழு லிஸ்ட் இதோ.

0
331
bigg
- Advertisement -

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நான்காம் வாரத்திற்கான நாமினேட் நடந்து இருக்கிறது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பயங்கரமாக விளையாடி வருகிறார்கள். தமிழில் புது வித்தியாசமான முயற்சியில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி மூன்று வாரத்தை கடந்து நான்காம் வாரம் ஆரம்பித்து உள்ளது. இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. தற்போது இதே கான்சப்டில் தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-

கடந்த 2 சீசன்களை போல போட்டியாளர்கள் அனைவரும் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன் போட்டியாளர்கள் இரண்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு தனிமைப்படத்தப்பட்ட பின்னரே பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் வனிதா, சினேகன், அபிராமி, சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், சுருதி, தாமரை, சுரேஷ் ஷாரிக், நிரூப் ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதலில் வெளியேறியவர்:

மேலும், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்குள் வன்மம் கலவரம் தொடங்கி விட்டது. இதனால் பயங்கரமாக ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருகிறார்கள். அதிலும் வனிதா வீட்டில் உள்ள அனைவருடன் சண்டை போடும், கொளுத்தி போட்டும் வருகிறார். அதுமட்டும் இல்லாமல் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் நாளே போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டு இருந்தார்கள். அதில் முதலில் சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேட் ஆகி இருந்தார். அதனை தொடர்ந்து இரண்டாம் வாரத்திற்கான எவிக்ஷனில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் சுஜா வருணி வெளியேறி இருந்தார்.

மூன்றாவது வாரம் எவிக்ஷன்:

இதை தொடர்ந்து நேற்று மூன்றாவது வாரம் எவிக்ஷன் நடந்தது. இதில் அபிநய் மற்றும் சாரிக் தான் வெளியேறி இருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி இருந்தார். நேற்றோடு அவர் நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டார். இதற்கான அறிக்கையும் கமலஹாசன் வெளியிட்டிருந்தார். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. நிகழ்ச்சியில் கூட கமலஹாசன் நான் விடை பெற்றுக் கொள்கிறேன் என்றும் கூறியிருந்தார். இது ரசிகர்களுக்கும்,போட்டியாளர்களுக்கும் வருத்தமாக இருந்தது.

-விளம்பரம்-

நான்காவது வாரம் எவிக்சன்:

பின் நான்காவது வாரம் தொடக்கத்திலேயே வனிதா என்னை தயவுசெய்து வெளியே அனுப்பி விடுங்கள். எனக்கு பிடிக்கவில்லை என்று பிக்பாஸ் இடம் அழுது புலம்பியிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் நான்காவது வாரம் எவிக்சன் நடந்துள்ளது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் இரண்டு பேரை நாமினேட் செய்திருக்கிறார்கள். அந்த பட்டியல் இதோ,

வனிதா – நீரூப், அபிராமி,சுருதி
சினேகன் – அனிதா, சுருதி, அபிராமி
தாடி பாலாஜி – சுருதி, நிரூப், அபிராமி
சுருதி – அபிராமி, தாடி பாலாஜி, ஜூலி
அபிராமி – வனிதா, தாடி பாலாஜி, சினேகன்
நிரூப் – ஜூலி, அபிராமி, வனிதா
ஜூலி – சுருதி, தாடி பாலாஜி, வனிதா
அனிதா – தாடி பாலாஜி, வனித, அபிராமி
தாமரை – அனிதா, சுருதி, நிரூப்
பாலாஜி முருகதாஸ் – தாடி பாலாஜி, சினேகன், வனிதா

மேலும், இந்த வார டிரெண்டிங் பிளேயர் பாலாஜி முருகதாஸ் மற்றும் இந்த வார கேப்டன் தாமரையை தவிர மீதம் இருந்த 8 பேரும் naminate பட்டியலில் உள்ளார்கள். இதில் இருந்து இந்த வாரம் யார் வெளியே போகிறார்கள்? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். அதுமட்டும் இல்லாமல் அடுத்த வாரம் யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போறாங்க? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். அடுத்து யார் வெளியில் போக போறாங்க என்று உங்களுக்கு தெரிந்தால்? கீழே கமெண்டில் சொல்லுங்கள்.

Advertisement