‘வாயில அசிங்கமா வருது’ – போட்டியாளரை கேலி செய்த ஜூலி அபிராமி, இதுவே மத்தவங்க பண்ணியிருந்தா.

0
570
julie
- Advertisement -

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஐந்தாம் வாரம் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பயங்கரமாக விளையாடி வருகிறார்கள். தமிழில் புது வித்தியாசமான கான்செப்டில் விஜய் டிவி தமிழில் அறிமுகப்படுத்திய நிகழ்ச்சி தான் பிக் பாஸ் அல்டிமேட். இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ottயில் ஒளிபரப்பானது. இதே கான்சப்டில் தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சியில் வனிதா, சினேகன், அபிராமி, சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், சுருதி, ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர். மேலும், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே போட்டியாளர்களுக்குள் வன்மம் கலவரம் தொடங்கி பயங்கரமாக ஒருவரை ஒருவர் தாக்கி விளையாடி வருகிறார்கள். மேலும், நிகழ்ச்சியில் இருந்து முதலில் சுரேஷ் சக்ரவர்த்தி எலிமினேட் ஆகி இருக்கிறார். அதனை தொடர்ந்து இரண்டாம் வாரத்திற்கான எவிக்ஷனில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் சுஜா வருணி மக்களின் இருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர்கள்:

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி: இதனை தொடர்ந்து மூன்றாவது வாரம் அபிநய் மற்றும் ஷாரிக் வெளியேறி இருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் மூன்றாம் வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து விக்ரம் பட சூட்டிங் நேரம் ஒதுக்க முடியாத காரணத்தினால் நிகழ்ச்சியில் இருந்து கமல் வெளியேறினார். அதோடு கமல் வெளியேறியதை தொடர்ந்து வனிதாவும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். தற்போது BB அல்டிமேட்டின் தொகுப்பாளராக சிம்பு களமிறங்கி இருக்கிறார். மேலும், வனிதா தாமாகவே வெளியேறிவிட்டதால் கடந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று கூறப்பட்டது.

ஐந்தாம் வாரம் நாமினேட்:

-விளம்பரம்-

இந்த வார கேப்டன் பாலாஜி முருகதாஸ் தவிர நாமினேட் ஆனவர்கள் தாடி பாலாஜி, சுருதி, அனிதா, ஜூலி, அபிராமி, சினேகன், தாமரை. இந்நிலையில் தற்போது அபிராமி- ஜூலி வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே அபிராமி குறித்து ஏதாவது ஒரு சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் உலா வந்து கொண்டு தான் இருக்கின்றன. அதேபோல் நிகழ்ச்சி ஆரம்பத்தில் ஜூலி அமைதியாக இருந்தாலும் போகப்போக தன்னுடைய ஆட்டத்தை காண்பித்து வருகிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்தே ஜூலியும், அபிராமியும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.

பிக் பாஸ் வீட்டில் ஜூலி- அபிராமி:

அதிலும் ஜூலி இந்த வீட்டில் அதிகம் அபிராமி உடன் தான் இருக்கிறார். அதிலும் நிரூப் விஷயத்தில் ஜூலி அபிராமிக்கு சாதகமாக தான் பேசி இருக்கிறார். அபிராமிக்கு நிரூப் உடன் ஏதாவது ஒரு பிரச்சினையை என்றால் ஜூலி நிருப்பை பயங்கரமாக வறுத்து எடுத்து வருகிறார். சமீபத்தில் கூட நிரூப்பை கடுமையாக ஜூலி பேசியிருந்தார். அப்போது எனக்கு நிரூப்பை சுத்தமாக பிடிக்கவில்லை என்று ஓபன் ஆகவே ஜூலி பேசி இருந்தார். இப்படி அபிராமிக்கு யாரு பிடிக்கவில்லையோ, ஜூலி அவர்களிடம் பேசுவது கிடையாது. அதே போல் நாமினேஷனில் கூட அபிராமி யாரை நாமினேட் செய்தாரோ, ஜூலியும் அவர்களே தான் நாமினேட் செய்தார். குறிப்பாக அபிராமி நிரூப்பை நாமினேட் பண்ணி இருந்தார். ஜூலியும் எனக்கு நிரூப்பை சுத்தமாகவே பிடிக்கவில்லை என்று நாமினேட் செய்திருந்தார்.

சுருதியை டார்கெட் செய்யும் ஜூலி -அபிராமி:

இப்படி ஜூலி, அபிராமி இருவரும் சேர்ந்து சில போட்டியாளர்களை பற்றியும் பேசி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஜூலி, அபிராமி இருவரும் கிண்டல் செய்து இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், ஜூலி- அபிராமி சேர்ந்து ஸ்ருதியை டார்கெட் பண்ணி கிண்டல் செய்து பேசி இருக்கிறார்கள். அதுவும் வேறொரு குரலில் மிமிக்ரி செய்து பேசுவது போல ஸ்ருதியை தாக்கி பேசி இருக்கிறார்கள். இப்படி இவர்கள் இருவரும் சுருதியை குறித்து பேசி இருக்கும் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் ஜூலி, அபிராமியை விமர்சித்தும் கண்டனம் செய்தும் வருகிறார்கள்.

Advertisement