சினேகனை தொடர்ந்து BB அல்டிமேட்டில் கலந்து கொள்ளும் அடுத்த போட்டியாளர். யார் தெரியுதா ?

0
479
- Advertisement -

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அடுத்த போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகும் மிகப்பிரபலமான நிகழ்ச்சி என்றாலே பிக் பாஸ். இது தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இந்தியாவில் முதன் முதலில் இந்தி மொழியில் தான் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தான் பிற மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழில் ஐந்து வருடங்களாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

இந்த ஐந்து வருடங்களாகவும் கமலஹாசன் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வருடமும் புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கப்பட்டது. ஆரம்பத்திலேயே நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களை களமிறக்கி இருந்தார்கள். பல போட்டிகள், சவால்கள் உடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்று இருந்தது.

- Advertisement -

ஹிந்தியில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி:

மேலும், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே கடந்த சில வாரங்களுக்கு முன் நிறைவடைந்தது. இதில் முதல் இடத்தை ராஜுவும், இரண்டாம் இடத்தை பிரியங்கா பிடித்தனர். அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து இருப்பதால் பிக் பாஸ் ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் ரசிகர்களுக்காக மீண்டும் ஒரு புது வகையான பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்க இருக்கிறது. அதாவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் வேறு இந்த பிக் பாஸ் வேறு. அதாவது பிக் பாஸ் வீட்டை 24 மணி நேரமும் பார்க்க முடியும்.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி:

இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. தற்போது இதே கான்சப்டில் இந்த நிகழ்ச்சியை தமிழிலும் தொடங்க இருக்கிறார்கள். தமிழில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் தமிழ் பிக் பாஸில் 1 முதல் 5 சீசன் வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். ஆனால், ஏற்கனவே பிக் பாஸ்ஸில் 5 சீசனில் பட்டத்தை வென்றவர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு இல்லை. அதே போல இந்த நிகழ்ச்சியையும் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சிக்கு பிக் பாஸ் அல்டிமேட் என்று பெயர் வைத்து உள்ளார்கள்.

-விளம்பரம்-

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளர்:

அதுமட்டும் இல்லாமல் பிக் பாஸ் கிராண்ட் பினாலேவில் இந்நிகழ்ச்சி குறித்து கமலஹாசன் கூறியிருந்தார். இந்த நிகழ்ச்சி வரும் ஜனவரி 30 ஆம் தேதி 6. 30 மணிக்கு துவங்க இருக்கிறது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பெயர்கள் சமூக வலைதளத்தில் அடிபட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் முதல் போட்டியாளர் சினேகன் என்பது உறுதியாகி இருக்கிறது. இன்னும் சில தினங்களில் இந்த நிகழ்ச்சி தொடங்க இருக்கும் நிலையில் ஒவ்வொரு போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகி வருகிறது.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இரண்டாவது போட்டியாளர்:

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அடுத்த போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் போட்டியாளர் புகைப்படம் வெளியாகி உள்ளது. அதில் அவர் போனை வைத்து தன் முகத்தை மறைத்திருக்கிறார். இதை பார்த்து பலரும் ஓவியா என்று கூறி இருந்தார்கள். ஆனால், அது ஓவியா இல்லை. அதற்கான ப்ரோமோவும் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இரண்டாவதாக கலந்துகொள்ளும் போட்டியாளர் ஜூலி. இவர் ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து இருந்தார். இவரை தொடர்ந்து அடுத்து யார் வரப் போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement