பிக் பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா ? இந்த சீசன்கும் கேப்டன் பதவிக்கும் ராசியே இல்ல போல.

0
656
biggboss
- Advertisement -

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இரண்டாவதாக வெளியேறி இருக்கும் நபர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரத்தை நெருங்கி உள்ளது. விஜய் டிவி புதிய கதைக்களத்துடன் இந்த நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி உள்ளது. தொலைக்காட்சி பிக் பாஸ் வேறு. இந்த பிக் பாஸ் வேறு. இதையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. தற்போது இதே கான்சப்டில் தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள்.

-விளம்பரம்-

இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் வனிதா, சினேகன், அபிராமி, சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், சுருதி, தாமரை, சுரேஷ் ஷாரிக், நிரூப் ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர். முதல் நாளே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்குள் வன்மம் கலவரம் தொடங்கி விட்டது. இதனால் பயங்கரமாக ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருகிறார்கள். மேலும், அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் வாரம் வனிதா, ஜூலி, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிநய், சுருதி, சினேகன், அனிதா, நிரூப் ஆகிய எட்டு பேர் வெளியேறுவதற்காக நாமினேஷன் பட்டியலில் இருந்தனர்.

- Advertisement -

அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் எலிமினேஷன்:

அதில் இருந்து முதலில் சுரேஷ் சக்கரவர்த்தி நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகி இருந்தார். அதுமட்டும் இல்லாமல் சுரேஷ் சக்ரவர்த்தி அடுத்த வாரத்திற்கான கேப்டன் பதவியை வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல இந்த வாரம் Trending Player Of The Week பெட்ரா வனிதாவும் இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்தார். பிறகு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இரண்டாம் நாமிநேஷன் நடந்தது. அதுவும் இந்த முறை நேரடி நாமிநேஷன் நடத்தி இருந்தார்கள்.

இரண்டாம் வாரம் எலிமினேஷன்:

அதில் சுஜா, ஜூலி, அபிநய், பாலாஜி முருகதாஸ் , தாடி பாலாஜி, தாமரை ஆகிய 6 பேர் நாமினேஷன் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் இரண்டாவது வாரத்துக்கான எவிக்சன் ஷூட்டிங் இன்று காலை தொடங்கி இருக்கிறது. அதில் இந்த வாரத்திற்கான எவிக்ஷனில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் சுஜா வருணி வெளியேறி இருக்கிறார். இது இன்று அல்லது நாளை நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் சுஜா வருணி. இவர் பெரும்பாலும் படங்களில் கவர்ச்சி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

சுஜா வருணி பிக் பாஸ் பயணம்:

பின் சினிமாவில் வாய்ப்பு குறைய தொடங்கியவுடன் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1ல் சுஜா வருணி நுழைந்தார். அதை தொடர்ந்து சுஜா வருணி இரண்டாவது சீசனிலும் விருந்தினராக சில நாட்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று இருந்தார். தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சுஜா வருணி வந்திருந்தார். இருந்தும் இவர் இரண்டாவது வாரத்திலேயே எவிக்ஷன் ஆகி வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், சுஜா வருணி இன்று தான் அடுத்த வார கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் கூட சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேறும் முன் தான் கேப்டனாக பொறுப்பேற்றார்.

அல்டிமேட் நிகழ்ச்சியில் அடுத்த வாரம் கேப்டன்:

ஆனால், கேப்டனான அடுத்த நாளே அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டார். அவர் வெளியேறும் முன் தன்னுடைய கேப்டன் பதவியை சினேகனுக்கு கொடுத்துவிட்டு சென்றார். அவரை போலவே கேப்டன் ஆன பின் வெளியேறி இருக்கும் சுஜா தன்னுடைய கேப்டன் பதவியை யாருக்கு கொடுத்துவிட்டு செல்லப்போகிறார்? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அந்த வகையில் அடுத்த வாரம் நாமினேஷனில் இருந்து யார் தப்பிக்க வேண்டும் என்பது சுஜா கையில் தான் இருக்கிறது. இது குறித்து உங்களுடைய கருத்து என்ன என்பதை கமெண்டில் சொல்லுங்கள்.

Advertisement