வனிதா வெளியேறியதால் No Eviction – இந்த வாரம் இவர் தான் போக வேண்டியது தப்பிச்சிட்டாரு.

0
271
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் தமிழில் புது வித்தியாசமான முயற்சியில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய நிகழ்ச்சி தான் பிக் பாஸ் அல்டிமேட். தற்போது இந்த நிகழ்ச்சி நான்காம் வாரத்தின் இறுதியை நெருங்கி உள்ளது. இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ottயில் ஒளிபரப்பானது. தற்போது இதே கான்சப்டில் தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள். கடந்த 2 சீசன்களை போல போட்டியாளர்கள் அனைவரும் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன் போட்டியாளர்கள் இரண்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு தனிமைப்படத்தப்பட்ட பின்னரே பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி பின்னரே என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
biggboss

இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் வனிதா, சினேகன், அபிராமி, சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், சுருதி, சுரேஷ் ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே போட்டியாளர்களுக்குள் வன்மம் கலவரம் தொடங்கி பயங்கரமாக ஒருவரை ஒருவர் தாக்கி விளையாடி வருகிறார்கள். மேலும், நிகழ்ச்சியில் இருந்து முதலில் சுரேஷ் சக்ரவர்த்தி எலிமினேட் ஆகி இருக்கிறார்.

- Advertisement -

இதுவரை எலிமினேட் ஆனவர்கள் பட்டியல்:

அதனை தொடர்ந்து இரண்டாம் வாரத்திற்கான எவிக்ஷனில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் சுஜா வருணி வெளியேறி இருந்தார். இதனை தொடர்ந்து மூன்றாவது வாரம் அபிநய் மற்றும் ஷாரிக் வெளியேறி இருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் கடந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து தொகுத்து வழங்கிய கமலஹாசன் பட சூட்டிங் நேரம் ஒதுக்க முடியாத காரணத்தினால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இது குறித்து கமல்ஹாசன் அறிக்கை கூட வெளியிட்டிருந்தார்.

நிகழ்ச்சியின் புது தொகுப்பாளர்:

இதனால் ரசிகர்களும் போட்டியாளர்களும் பெரும் அப்சட் அடைந்து உள்ளனர். அதோடு கமல் வெளியேறியதை தொடர்ந்து வனிதாவும், நான் நிகழ்ச்சிக்கு வந்ததே கமலஹாசனுக்காக மட்டும் தான். அவர் எது சொன்னாலும் நான் கேட்டுகொள்வேன். அவர் இடத்தில் வேறு யார் வந்து சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று நிகழ்ச்சியில் தொடர விரும்பவில்லை என்று கூறி வனிதா வெளியேறினார். தற்போது BB அல்டிமேட்டின் தொகுப்பாளராக சிம்பு தான் வரப்போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டும் இல்லாமல் அதற்கான ப்ரோமோ எல்லாம் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-

நான்காம் வாரம் நாமினேஷனில் இருந்தவர்கள்:

அதேபோல் இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நபர் ஒருவர் நுழைகிறார். சில வாரங்களுக்கு முன்பு வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்தி வர இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக வில்லை. மேலும், இந்த வாரம் angel மற்றும் demon என்ற டாஸ்க் போய் கொண்டு உள்ளது. போட்டியாளர்கள் ஒவ்வொரும் அருமையாக விளையாடி வருகிறார்கள். இந்நிலையில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனின் இந்த வார கேப்டன் தாமரை மற்றும் இந்த வார ட்ரெண்டிங் பிளேயர் பாலாஜி முருகதாஸை தவிர மீதமுள்ள 8 பெரும் நாமினேட் ஆகி இருக்கின்றனர்.

இந்த வாரம் எவிக்ஷன் பற்றிய தகவல்:

அந்த வகையில் ஓட்டுகளின் அடிப்படையில் தாடி பாலாஜி தான் குறைந்த ஓட்டுகள் வாங்கி இருந்தார். அதனால் தாடி பாலாஜி இந்த வாரம் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வனிதா தானாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதால் இந்த வாரம் எவிக்ஷன் இல்லை என்று பிக்பாஸ் அறிவித்திருக்கிறது. இதனால் தாடி பாலாஜி இந்த வாரம் காப்பாற்றப்பட்டார். அடுத்த வாரம் தாடி பாலாஜி இருப்பாரா? வேற யாராவது வெளியே போறாங்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

Advertisement