‘சினேகன் மட்டுமல்ல வனிதாவும் Safe ‘பிக் பாஸ் அல்டிமேட்டின் இரண்டாம் நாமிநேஷன் – யார் ? யாரை நாமினேட் செய்தனர். இதோ எக்ஸ்குலுசிவ் லிஸ்ட்.

0
501
biggboss
- Advertisement -

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரத்தை கடந்து உள்ளது. அதுவும் விஜய் டிவி புதிய கதைக்களத்துடன் இந்த நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி உள்ளது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் வேறு. இந்த பிக் பாஸ் வேறு. இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. தற்போது இதே கான்சப்டில் தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சியில் வனிதா, சினேகன், அபிராமி, சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், ஜூலி, தாமரை, சுரேஷ் ஷாரிக், நிரூப் ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர். முதல் நாளே அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிராமி புகை பிடிக்கும் வீடியோ, வனிதா குழாய் அடி சண்டை, நிரூப் முன்னாள் காதல் என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருந்தது.

- Advertisement -

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள்:

அதோடு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே போட்டியாளர்களுக்குள் வன்மம் கலவரம் தொடங்கி விட்டது. இதனால் பயங்கரமாக ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருகிறார்கள். அதிலும் வனிதா பயங்கரமாக கொளுத்தி போட்டு வருகிறார். மேலும், அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் நாளே போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டு இருந்தார்கள். இதில் வனிதா, ஜூலி, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிநய், சுருதி, சினேகன், அனிதா, நிரூப் ஆகிய எட்டு பேர் வெளியேறுவதற்காக நாமினேஷன் பட்டியலில் இருந்தனர்.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் எலிமினேட்:

அதில் இருந்து முதலில் சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேட் ஆகி இருக்கிறார். ஆனால், அடுத்த வாரம் முழுவதும் வீட்டில் கேப்டனாக இருக்க நடந்த போட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தி தான் வெற்றி பெற்றார். இதனால் கேப்டன் பதவியை சினேகனுக்கு கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். அதே போல இந்த வாரம் Trending Player Of The Week பெட்ரா வனிதாவும் இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்தார். இந்நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இரண்டாம் நாமிநேஷன் நடந்து இருக்கிறது. அதுவும் இந்த முறை நேரடி நாமிநேஷன் நடத் தி இருக்கிறார்கள். அதில் போட்டியாளர்கள் நாமிநேஷன் செய்யும் நபரின் முகத்தில் மார்க் போட வேண்டும். அப்படி நாமிநேஷன் செய்த போட்டியாளர்களின் எக்ஸ்குலுசிவ் லிஸ்ட்.

-விளம்பரம்-

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் எலிமினேட் பட்டியல்:

பாலாஜி – ஜூலி, சுருதி
நிரூப் – அபிநய், ஜூலி
சுஜா வருணி – தாடி பாலாஜி, ஜூலி
தாடி பாலாஜி – அபிநய், ஜூலி
தாமரை – தாடி பாலாஜி, சுஜா வருணி
சுருதி – தாமரை, பாலாஜி முருகதாஸ்
ஷாரிக் – சுஜா, அபிநய்
அபிநய் – நிரூப், சுஜா
அனிதா – சுஜா, ஜூலி
அபிராமி – ஜூலி, சுஜா வருணி
ஜூலி – சுஜா வருணி, பாலாஜி முருகதாஸ்
வனிதா – ஜூலி, சுஜா
சினேகன் – தாமரை, அனிதா

நாமினேட் செய்யப்பட்ட நபர்கள்:

இதில் சுஜா, ஜூலி, அபிநய், பாலாஜி முருகதாஸ் , தாடி பாலாஜி, தாமரை ஆகிய 6 பேர் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் இருந்து இந்த வாரம் யார் எலிமினேட் ஆக போகிறார்? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். இரண்டாவதாக பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து யார் எலிமினேட் ஆகிப்போகிறார்கள்? என்று உங்களுக்கு தெரிந்தால் கீழே கமெண்டில் சொல்லுங்கள்.

பிக் பாஸ் அல்டிமேட்டில் உங்களுக்கு பிடித்த போட்டியாளருக்கு வாக்களிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும் :

Advertisement